மேலும் அறிய

Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?

Driverless Pod Taxi: பெரு நகரங்களின் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவின் முதல் ஓட்டுநரில்லா பாட் டாக்சி திட்டம் அமலுக்கு வர உள்ளது.

இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா காருக்கான தொடக்கவிழா மும்பை பிகேசியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்று பார்க்கலாம்.

மும்பை நகரத்தின் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவின் முதல் ஓட்டுநரில்லா 'பாட் டாக்சி' (Pod Taxi) திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

மும்பையின் மிக முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில், இந்த அதிநவீன போக்குவரத்து சேவையைத் தொடங்க மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் திட்ட அறிக்கை தயார் செய்து ஒப்புதல் அளித்தது. இதற்கான தொடக்க பணிக்கு நேற்று மும்பையில் அடிக்கல்  நாட்டு விழா நடைபெற்றது.


Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?

8.8 கி.மீ. தூரத்துக்கு பாதை, 22 நிறுத்தங்கள்

ஆயிரக்கணக்கான கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ள BKC பகுதிக்குத் தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களின் போக்குவரத்து பிரச்சனையைத் தீர்ப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சுமார் 8.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு, தரையிலிருந்து உயர்த்தப்பட்ட தனிப் பாதையில் இந்த பாட் டாக்சிகள் இயக்கப்பட உள்ளன. பாந்த்ரா மற்றும் குர்லா ரயில் நிலையங்களை இணைக்கும் இந்த வழித்தடத்தில் மொத்தம் 22 நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.

6 பேர் பயணிக்கலாம்

முற்றிலும் தானியங்கி முறையில், ஏஐ தொழில்நுட்பத்துடன் ஓட்டுநர் இன்றி செயல்படும் இந்த பாட் டாக்சியில், ஒரே நேரத்தில் ஆறு பயணிகள் வரை அமர்ந்து பயணிக்கலாம். மணிக்கு அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த வாகனங்கள், எவ்வித ஒலி அல்லது காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்தாத மின்சார வாகனங்களாக செயல்படும். முழுக்க முழுக்க பாதுகாப்பான பயணத்தை இந்த டாக்ஸி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?

1016 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம்

சுமார் ரூ.1016 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த மாபெரும் திட்டம், அடுத்தடுத்து பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ளது. இதன் முதல் கட்டம், குர்லா முனையம் மற்றும் பாந்த்ரா (கிழக்கு) இடையே 3.36 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியதாக இருக்கும். முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன் மக்களின் பயன்பாட்டிற்கு படிப்படியாகக் கொண்டுவரப்படும்.

வெளிநாடுகளில் மட்டுமே சாத்தியம் என நினைக்கப்பட்ட இந்தச் சிறப்பான போக்குவரத்து வசதி, இந்தியாவில் முதல்முறையாக அறிமுகமாவது பொதுப்போக்குவரத்துத் துறையில் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மும்பைவாசிகளின் தினசரி பயண நேரம் கணிசமாக மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget