மேலும் அறிய

India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?

India Canada Diplomats: இந்தியாவிற்கான கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற்றுவதாக மத்த்ய அரசு அறிவித்துள்ளது.

India Canada Diplomats: காலிஸ்தானி தீவிரவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.

கனடா அதிகாரிகள் 6 பேர் வெளியேற்றம்:

காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிற்கான கனடாவின் உயர் தூதரக அதிகாரி ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் உட்பட ஆறு தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தூதரக உயர் அதிகாரி ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் உடன்,  பாட்ரிக் ஹெபர்ட், மேரி கேத்தரின் ஜோலி, லான் ரோஸ் டேவிட் ட்ரைட்ஸ், ஆடம் ஜேம்ஸ் சூப்கா, மற்றும் பவுலா ஓர்ஜுவேலா ஆகியோர், வரும் சனிக்கிழமை (அக்டோபர் 19) இரவு 11:59 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகளை திருமப்ப் பெற்ற இந்தியா 

நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில், கனடாவிற்கான இந்தியாவின் தூதர் சஞ்சய் குமார் வர்மாவின் பெயரை குறிப்பிட்டதற்காக கனடாவை வெளியுறவு அமைச்சகம் கடுமையாக சாடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.  அதனைதொடர்ந்தே, கனடாவிற்கான இந்தியாவின் உயர் தூதரக அதிகாரி மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்ட  தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற முடிவு செய்த சில மணிநேரங்களில், கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

”கனடா மீது நம்பிக்கை இல்லை”

கனடாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டீவர்ட் வீலரை நேரில் அழைத்து வெளியுறவு அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சந்திப்பு தொடர்பான அறிக்கையில், “தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தற்போதைய கனடா அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, உயர் ஆணையரை திரும்பப் பெற இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதம், வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு ட்ரூடோ அரசு அளித்து வரும் ஆதரவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2023 இல், நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைதொடர்ந்து,  இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டன. ஆனாலும், தற்போது வரை இந்தியாவின் தலையீடு தொடர்பாக எந்த தகவலையும் கனடா அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”Balaji Murugadoss Vs Fatman | ”1.5 வருஷம் வீணாப்போச்சு என்னை ஏமாத்திட்டாரு”FAT MAN vs BIGBOSS பாலாஜிGovernor RN Ravi | ”காப்பாத்துங்க சார்.. முடியல..”ஆளுநரிடம் மாணவர் பகீர்!பதறிய அமைச்சர் கோவி.செழியன்Kallakurichi : கள்ளச்சாராய விற்பனை ஜோர் கள்ளக்குறிச்சியில் மீண்டும் பகீர்.. ஆக்‌ஷனில் இறங்கிய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
Thanjavur Power Shutdown: தஞ்சை மக்களே உங்கள் கவனத்திற்கு... நாளை மின்தடை - எங்கெல்லாம் தெரியுமா..?
தஞ்சை மக்களே உங்கள் கவனத்திற்கு... நாளை மின்தடை - எங்கெல்லாம் தெரியுமா..?
Chennai Red Alert: தாக்குப்பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப்போவது என்ன?
தாக்குப்பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப்போவது என்ன?
மீனவர்களே உஷார்... மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு போக வேண்டாம்... புயல் காற்று அடிக்குமாம்
மீனவர்களே உஷார்... மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு போக வேண்டாம்... புயல் காற்று அடிக்குமாம்
Rasi Palan Today, Oct 15: துலாமுக்கு மகிழ்ச்சி செய்தி வரும்; எதிர்பாலினத்திடம் கவனம் விருச்சிகம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: துலாமுக்கு மகிழ்ச்சி செய்தி வரும்; எதிர்பாலினத்திடம் கவனம் விருச்சிகம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Embed widget