மேலும் அறிய

‛தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே’ நம் தேசத்தின் 73வது குடியரசு தினம் இன்று!

சாசன வரைவு செய்யும் அரசியல் சாசன நிர்ணய சபை 9 டிசம்பர்  1946 ல் கூடியது. அதன் இறுதி கூட்டம் 26 நவம்பர் 1949ல் முடிவடைந்தது. அதற்கு அடுத்த சில காலத்திலேயே அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்! இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ந் தேதியை குடியரசு நாளாக அனுசரிக்கின்றது. இந்த வருடம் இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை அனுசரிக்கிறது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 1950 வரை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் செயல்முறைக்கு வரவில்லை. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசன வரைவு குழுவுக்குத் தலைமையேற்றார். இதையடுத்து 1949ல் இந்தியா அரசியல் சாசன நிர்ணய சபை சாசனத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 26 அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுகிறது.  ​

இதற்கிடையேதான் 26 ஜனவரி  குடியரசு தினமாக நாடெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினக் கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாகப் பார்க்கபடுவது டெல்லி ராஜப்பாட்டையில் இருந்து இந்தியா கேட் வரை செல்லும்  வருடாந்திரப் பேரணிதான். இன்றைய தினத்தில் குடியரசுத் தலைவர் ராஜபாதையில் கொடியேற்றுவார். இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய பண்பாடு மற்றும் சமூக  பாரம்பரியங்களின் அணிவகுப்பு, இந்திய  ராணுவத்தின் வான் வெளி சாகசங்கள் ஆகியன இடம் பெறும்.

‛தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே’  நம் தேசத்தின் 73வது குடியரசு தினம் இன்று!

இதுதவிர இதே நாளில்தான் குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ , பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கௌரவிப்பார். வீர தீர செயல்களுக்கான பரம்வீர் சக்ரா விருது, அசோக சக்ரா விருது, வீர் சக்ரா விருது ஆகியவை வழங்கப்படும்.

ஜனவரி 26, 1950ல் தான் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது.  அதனை  வரைவு செய்யும் அரசியல் சாசன நிர்ணய சபை 9 டிசம்பர்  1946 ல் கூடியது. அதன் இறுதி கூட்டம் 26 நவம்பர் 1949ல் முடிவடைந்தது. அதற்கு அடுத்த சில காலத்திலேயே அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

‛தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே’  நம் தேசத்தின் 73வது குடியரசு தினம் இன்று! குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

குடியரசு தினம் என்பது  இந்தியாவின் சுதந்திர  உணர்வை  பறைசாற்ற அனுசரிக்கப்படுவது. இதே நாளில்தான் 1930ல்  இந்தியாவை பூரண சுதந்திரம்  (Purna Swaraj)பெற்ற நாடாக இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்துத் தீர்மானம் இயற்றியது. ஒவ்வொரு இந்தியக்  குடியும் தங்களது அரசை ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றிருப்பதையும் இந்த  நாளில் நாம் அனுசரிக்கின்றோம்.  அந்த வகையில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம் என பல்வேறு முக்கிய மாநிலங்களின் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் இந்தக் குடியரசு தினம் கூடுதல் சிறப்புடையதாகிறது. ஆட்சியாளர்களைப் பொறுப்புணர்வோடு தேர்ந்தெடுப்போம்.,குடியரசைப் போற்றுவோம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget