11 AM Headlines: ஒரு வாக்குக்கு ரூ.8.4 கோடி, கனடா பிரதமருக்கு 4 நாட்கள் கெடு - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நடத்துனர் மரணம் - பயணி மீது வழக்குப்பதிவு
சென்னை மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பயணி கோவிந்தன் மீது 3 பிரிவுகளில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றம்.
ஆதார் அட்டையை வயதுக்கான சான்றாக பயன்படுத்த முடியாது - உச்ச நீதிமன்றம்
ஆதார் அட்டையை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். வயதுக்கான சான்றாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றே அரசின் அறிக்கை கூறுகிறது. விபத்து இழப்பீடு வழக்கில் வயதுக்கான சான்றாக ஏற்றுக்கொண்டு பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
கரையை கடந்த டாணா புயல்
ஒடிசா, மேற்குவங்கம் இடையே தீவிர புயலாக கரையைக் கடந்த ’டாணா’ புயல். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக, 120 கிமீ வேகத்தில் புயல் கரையை கடந்தது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்தன.
அன்மோல் பிஷ்னோய் - என்.ஐ.ஏ., சன்மானம் அறிவிப்பு
சிறையில் உள்ள கூலிப்படைத் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் குறித்து, தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டில் என்.ஐ.ஏ., பதிவு செய்த 2 வழக்குகளில் அன்மோல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவலரை கொல்ல முயற்சி
கர்நாடகாவில் போக்குவரத்து விதிகளை மீறி காரை ஓட்டி வந்த நபரை வழிமறித்த காவல்துறை அதிகாரியை பேனட் மீது தூக்கிச் சென்றதால் பரபரப்பு. சிறிது தூரம் சென்றதும் கீழே குதித்து உயிர் தப்பினார் காவல்துறை அதிகாரி. விதி மீறலில் ஈடுபட்டு தப்பிச் சென்ற அந்த நபரை, 5 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு கைது செய்தனர்.
தினமும் 1 மில்லியன் பரிசு - எலான் மஸ்கின் அறிவிப்பிற்கு நீதிமன்றம் தடை
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் ட்ரம்புக்கு ஆதரவளிப்பவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, தேர்தல் முடியும் வரை (நவ. 5) தினமும் $1 மில்லியன் பரிசு அளிப்பதாக எலன் மஸ்க் அறிவித்ததற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மஸ்கின் செயல் தேர்தல் விதிகளை மீறுவதாகவும், வாக்களிப்பதற்கு பணம் கொடுக்கும் செயலாக கருதப்படுவதாலும் அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கனடா பிரதமர் 4 நாட்களுக்குள் பதவி விலக எம்.பி.க்கள் கெடு
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று, 4 நாட்களுக்குள் (அக்.28) ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அதிருப்தி எம்.பி.க்கள் கடிதம் வழங்கியுள்ளனர். ட்ரூடோ மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம்:
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கேப்டனாவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது. அவரளித்த விளக்கத்தை ஏற்று 3 பேர் கொண்ட குழு, வார்னர் மீதான தடையை திருமபப் பெற்றுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
எமர்ஜிங் ஆசிய கோப்பை - அரையிறுதியில் இந்தியா Vs வங்கதேசம்
எமர்ஜிங் ஆசியகோப்பையில் இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. முன்னதாக, பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.