Video: தீர்ந்து போன பெட்ரோல்; கறார் காட்டிய வாடிக்கையாளர்.. ரேபிடோ டிரைவருக்கு வந்த சோதனை!
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரேபிடோ டிரைவர் படும் கஷ்டத்தை பார்க்க பரிதாபமாக உள்ளது என்று கமெண்ட் செய்துள்ளார்.
![Video: தீர்ந்து போன பெட்ரோல்; கறார் காட்டிய வாடிக்கையாளர்.. ரேபிடோ டிரைவருக்கு வந்த சோதனை! hyderabad rapido video customer behaviour denied to walk after petrol finished in bike driver has to push Video: தீர்ந்து போன பெட்ரோல்; கறார் காட்டிய வாடிக்கையாளர்.. ரேபிடோ டிரைவருக்கு வந்த சோதனை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/13/22c552f5bcb2c9aac33cc08299a87cbd1707789219674571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்பெல்லாம் நாம் எங்காவது செல்ல வேண்டும் என்றால் பேருந்து போன்ற வாகனங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், இப்போது உலகம் எவ்வளவோ மாறி எத்தனையோ முன்னேற்றங்களை பெற்றுள்ளது.
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ola, uber, rapido போன்ற கார் மற்றும் பைக் டாக்ஸிகள் எத்தனையோ நகர்புறங்களில் படையெடுக்க தொடங்கி விட்டது. நம் நின்ற இடத்தில் இருந்து மொபைல் மூலம் புக் செய்தால் போதும், தங்கள் முன் வந்து நின்று ஏற்றிசென்று, செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் இறக்கிவிடுவார்கள். இப்படி ஒருபுறம் அனைத்து நல்ல விதமாக சென்றாலும், அவ்வபோது வாகன ஓட்டிகளும், வாடிக்கையாளர்களும் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.
சமீபத்தில் இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரேபிடோ டிரைவர் படும் கஷ்டத்தை பார்க்க பரிதாபமாக உள்ளது என்று கமெண்ட் செய்துள்ளார்.
என்ன நடந்தது..?
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ரேபிடோ பைக் ஒன்றை வாடிக்கையாளர் புக் செய்துள்ளார். அதன்பிறகு ரேபிடோ டிரைவர் வாடிக்கையாளரை அமரவைத்து ஓட்டிச் சென்றபோது வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது.
பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால், வாடிக்கையாளரை கீழே இறந்து சிறிது தூரம் இறந்து நடந்து வருமாறு டிரைவர் கூறியுள்ளார். அப்போது வாடிக்கையாளர் கீழே இறங்க மறுத்து விட்டு, பெட்ரோல் பங்கு வரை தன்னை வைத்துகொண்டு பைக்கை தள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
@rapidobikeapp @Olacabs @UberIN_Support @hyderabad #FunFact #rapido #bike #TRENDING
— Saleem (@Saleemammu) February 10, 2024
Just for fun. pic.twitter.com/twFRRP6bl5
'புக்கிங்கிற்கு பணம் கொடுத்துவிட்டேன், நடக்க மாட்டேன்'..
'புக்கிங்கிற்கு பணம் கொடுத்துவிட்டேன், நடக்க மாட்டேன்' என வாடிக்கையாளர் கூறியதாக பாதிக்கப்பட்ட ரேபிடோ டிரைவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பைக் டிரைவர் பல முறை இறங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார், ஆனால் அதன் பிறகும் வாடிக்கையாளர் 'நான் இறங்க மாட்டேன்’ என கூறியதால், வேறு வழியின்றி பைக் டிரைவர் அவரை உட்கார வைத்து பெட்ரோல் பங்கு வரை இருசக்கர வாகனத்தை தள்ளியுள்ளார்.
ஆதரவும், எதிர்ப்பும்..
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படி செய்வது தவறு என்று வாடிக்கையாளரை சரமாரியாக சமூகவலைதளங்களில் தாக்கி வருகின்றனர். மறுபுறம், வாடிக்கையாளருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்து இருக்கலாம். அதனால் கூட இப்படி செய்திருக்கலாம் என்று வேறு சில நெட்டிசன்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.
மேலும், ஒரு சிலர் ரேபிடோ டாக்சி ஓட்டுநர் வாடிக்கையாளரை ஏற்றிகொள்வதற்கு முன் பெட்ரோல் வண்டியில் இருக்கிறதா என்பதை பார்த்திருக்க வேண்டும். அதுதான் அவருடைய பொறுப்பு என்று கூறியுள்ளனர். இன்னும் ஒரு சிலர், என்னதான் ரேபிடோ டிரைவர் மீது தவறு இருந்தாலும், சிறிதளவு மனிதாபிமானம் காட்டி இறங்கி நடந்து சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)