மேலும் அறிய

Balapur Ganesh laddu | ஆயிரம் ரூபாயில் தொடங்கி ரூ.18 லட்சத்தில் முடிந்த லட்டு ஏலம்.. இது ஆந்திரா ஸ்பெஷல்!

ஏலத்தில் பெற்ற லட்டுவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொடுக்கவுள்ளாராம் எம்.எல்.ஏ ரமேஷ் யாதவ்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது புகழ்பெற்ற பாலபூர் கணேஷ் ஆலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் ஒரு பகுதியாக  கணேஷ் நிமஜ்ஜன் யாத்திரை என்ற வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வழிபாட்டின் போது  கணபதிக்கு அதிக எடையிலான லட்டு படைக்கப்படுவது வழக்கம். தூய நெய் மற்றும் உலர்ந்த சுத்தமான பழங்களால் செய்யப்பட்ட லட்டுவின் மேல் தங்க முலாம் பூசப்பட்டு,  கடவுள் முன்னிலையில் வெள்ளி கிண்ணம் ஒன்றில் வைப்பார்களாம். அதன் பிறகு  கடவுளுக்கு படைக்கப்படும் லட்டுவை பொதுவெளியில் ஏலமிடுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் பங்கேற்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும், லட்டு யாருக்கு கிடைக்கிறது என்பதை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுகிறது. அந்த லட்டுவின் ஆரம்ப விலையானது நூற்றுக்கணக்கில் தொடங்கி பின்னர் லட்சக்கணக்கில் முடிவடைவது வழக்கம் . அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்ற கணேஷ் நிமஜ்ஜன் யாத்திரை விழாவில், 21 கிலோ எடையிலான  தங்க மூலாம் பூசப்பட்ட லட்டு ஏலமிடப்பட்டது. 


Balapur Ganesh laddu | ஆயிரம் ரூபாயில் தொடங்கி ரூ.18 லட்சத்தில் முடிந்த லட்டு ஏலம்.. இது ஆந்திரா ஸ்பெஷல்!


இறுதியில் லட்டுவை ஆந்தி மாநிலம்  எம்எல்எ ரமேஷ் யாதவ் மற்றும் அபாகஸ் என்னும் தனியா கல்வி நிறுவனத்தின், நிறுவன தலைவர்  மர்ரி ஷஷாங்க் ரெட்டி ஆகிய இருவரால்  வெற்றிகரமாக ஏலம் எடுக்கப்பட்டது. இதனை ரூ .18.9 லட்சத்திற்கு இருவரும் ஏலம் எடுத்துள்ளனர். இம்முறை லட்டுக்கான ஏலம் ரூ .1,116 இல் தொடங்கியுள்ளது. இந்த லட்டுவை சாப்பிடுவதால் கடவுளின் ஆசீர்வாதம் நேரடியாக கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. நாளடைவில் லட்டுவை ஏலத்தில் பெறுவதென்பது பணக்காரர்களுக்கு கவுரவம் என்றாகிவிட்டது. எனவே ஏலத்தின் போது கடுமையான போட்டா போட்டி நிலவுவது வழக்கம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஏலத்தில் பெற்ற லட்டுவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொடுக்கவுள்ளாராம் எம்.எல்.ஏ ரமேஷ் யாதவ்.


Balapur Ganesh laddu | ஆயிரம் ரூபாயில் தொடங்கி ரூ.18 லட்சத்தில் முடிந்த லட்டு ஏலம்.. இது ஆந்திரா ஸ்பெஷல்!
1994 ஆம் ஆண்டு முதலே பாலப்பூர் கணேஷ் ஆலயத்தில் லட்டு திருவிழா நடைமுறையில் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் இந்த  லட்டு ஏலம் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு வரும் வருவாயை அப்பகுதியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துவார்களாம். கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவது ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில் திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு லட்டு திருவிழா நடத்தப்படவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற திருவிழாவில் பாலாப்பூரை சேர்ந்த கோலன் ராம் ரெட்டி என்பவர் ரூ .17.60 லட்சத்திற்கு வெற்றிகரமாக லட்டு ஏலம் எடுத்துள்ளார். ஏலம் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக அமைத்து வழிபட்ட விநாயகர் சிலையானது ஆற்றில் கரைக்க எடுத்துச்செல்லப்படுமாம்.

 

 

 

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Embed widget