மேலும் அறிய
Advertisement
Headlines Today: இன்று காவலர் தேர்வு..! திருவண்ணாமலை தீபத்திருவிழா..! இந்தியா - நியூசிலாந்து மோதல்..! இன்னும் பல...
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு
- தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு
- காவல்துறையில் உள்ள 3,552 காலியிடங்களை நிரப்ப 2ஆம் நிலை காவலர்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
- மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க டிசம்பர் 31ஆம் தேதிவரை சிறப்பு முகாம், அதுவரை சிரமமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
- கொடியேற்றத்துடன் தொடங்குகிறது திருவண்ணாமலை தீபத்திருவிழா. கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
- மாற்றுத் திறனாளிகளுக்கான மெரினா கடற்கரையில் நிரந்தரப் பாதை; முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
- கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவரை இழுத்துச் சென்ற முதலை; நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு.
- பண்பாட்டில் உச்சத்தையும் இலக்கியத்தில் முதிர்ச்சியையும் பெற்றது தமிழ்ச் சமூகம்; பொருநை இலக்கிய விழாவை காணொளி வாயிலாக துவக்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
- கால்நடை மருந்து தட்டுப்பாட்டிற்கு விரைந்து தீர்வு காண வேண்டும்; எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி வலியுறுத்தல்
- தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை; அமைச்சர் சுப்ரமணியம் விளக்கம்.
இந்தியா
- புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நேனோ செயற்கைக் கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பிஎஸ்எல்வி சி54 ராக்கெட். அடுத்த ஆண்டு ஆதித்யா செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவிப்பு.
- இளைஞர்கள் அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்; அரசியல் சாசனதினக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
- குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம்; சட்டபேரவை தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி.
உலகம்
- சீனாவில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
- இத்தாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி; காணமல் போன 13 பேரை தேடும் பணி தீவிரம்.
-
அமெரிக்காவில் மிகவும் வயது முதிர்ந்த இந்திய யானை கருணைக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சோகம்
விளையாட்டு
- உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியா, போலாந்து அணிகள் வெற்றி.
- உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் நள்ளிரவு நடந்த அர்ஜெண்டினா மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.
- உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் கால் இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி.
- இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion