மேலும் அறிய
Advertisement
6 PM Headlines: இன்றைய 6 மணி தலைப்பு செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்ன..?
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
Headlines Today:
தமிழ்நாடு:
- ஜி- 20 கூட்டமைப்பு விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ளார்.
- வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 7,8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- கடந்த ஒன்றரை ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு ஒரு செயல் பாபு எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூடியுள்ளார்.
- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் திருமணம்.
- புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரெங்கசாமி அறிவிப்பு.
- தென்காசி: நீர்வரத்து சீரானதால் பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலையில் தீபத்திருவிழா ஒட்டி கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம், பக்தர்கள் பெரிய தேரை இழுத்துச் சென்றனர்.
இந்தியா
- குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. 93 தொகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை குறைக்கப்பட்ட பிறகும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏன் குறைக்கப்படவில்லை என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம்
- ஹிஜாப்புக்கு எதிராக இரண்டு மாதமாக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், உடை கட்டுப்பாட்டு விதியை கண்காணிக்கும் அறநெறி காவல்துறையை ஈரான் அரசு கலைத்தது.
- 90% மக்களுக்கு கொரோனா எதிர்ப்புசக்தி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
- FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸும் போலந்தும் மோதுகின்றன.
- வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 29 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேசம். வெற்றிபெறுவதற்கு இன்னும் 77 ரன்கள் தேவைப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion