மேலும் அறிய

Headlines Today, 19 Oct: விஜயபாஸ்கரிடம் சிக்கியவை... சென்னை வரும் தோனி... பின்வாங்கிய மாநாடு.. இன்னும் பல..!

Headlines Today, 19 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.

Headlines Today in Tamil, 19 Oct:

தமிழ்நாடு:

* அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில்  ரொக்கமாக ரூ.23,85,700 பணமும், 4.8 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ. 2.17 கோடி ஆகும்.

* தமிழ்நாட்டில் நேற்று 1,26,312   மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,192 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 150  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 13  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1423. பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

* சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் உள்பட ஐந்து பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* அசைவ பிரியர்கள், மது குடிப்போர் தடுப்பூசி போடும் விதமாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

* தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

இந்தியா:

* கேரளாவில் அன்னாச்சி பழத்துக்குள் வெடிவைத்து அதை உட்கொண்டதால் கர்ப்பிணி யானை கடந்த 2020-ஆம் ஆண்டு மே  மாதம் உயிரிழந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

* கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 30 உடல் மீட்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* தனது பர்ஸ் திருடப்பட்ட பிறகும், ஜொமாட்டோ டெலிவரி மேற்கொள்ளும் நபர் ஒருவர் தனது டெலிவரியை முடித்திருப்பது குறித்து சச்சின் கல்பாக் என்ற வாடிக்கையாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

* கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம்:

* அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான காலின் பவல் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உடல் உபாதைகள் காரணமாக இன்று மரணமடைந்தார். 

* பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்செலினா ஜூலி தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். தங்கள் உரிமைகளுக்காக போராடும் இளவயதினருக்காக இந்தப் புத்தகத்தையும் எழுதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பொழுதுபோக்கு

* சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

* அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து கலக்கும் மருதாணி என்ற பாடல் வெளியானது.

விளையாட்டு

* இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.

* டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வருவார் என்று என்.ஶ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Fengal Cyclone:
Fengal Cyclone: "புயலோ, மழையா.. எது வந்தாலும் தயார்" ஃபெஞ்சலை எதிர்கொள்ள சென்னை ரெடி - மேயர் பிரியா
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
Embed widget