மேலும் அறிய
Advertisement
Morning Wrap | 04.7.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய தகவல்களை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- தமிழ்நாட்டில் புதியதாக 4 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 115 நபர்கள் உயிரிழப்பு
- சென்னையில் நேற்று 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக கோவையில் 474 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
- கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே போதும் – ஐ.சி.எம்.ஆர். தகவல்
- ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் முறைகேடா? – தனி நீதிபதியை நியமித்து விசாரணையை தொடங்கியது பிரான்ஸ்
- நாட்டில் இதுவரை 35 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 58.11 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டனர்.
- கர்நாடகாவில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் – பேருந்து சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகளுக்கு நாளை முதல் அனுமதி
- 4 மாதங்களில் 3 முதல்வர்கள் - உத்தரகாண்டின் புதிய முதல்வராக புஷ்கர்சிங் தாமி இன்று பதவியேற்பு
- கருப்பு பூஞ்சை நோய்க்கு கூடுதலாக 1.14 லட்சம் குப்பிகள் மருந்துகள் ஒதுக்கீடு
- வட இந்தியாவில் வெப்பநிலை படிப்படியாக குறையும் – இந்திய வானிலை ஆய்வு மையம்
- மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடக்கம்
- கர்நாடக முதல்வர் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு – மீண்டும் விசாரிக்க உத்தரவு
- மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம்
- தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் இடி. மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- நியாய விலை கடைகளில் தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- பிரதமர் மோடியுடன் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் நேரில் சந்திப்பு – மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று மோடி அறிவுரை
- குழந்தைகளை பணத்திற்கு விற்ற விவகாரத்தில் தனியார் அறக்கட்டளை நிர்வாகி மற்றும் காப்பக ஊழியர் கைது
- கர்நாடக கட்டிய புதிய அணை – கிருஷ்ணகிரி மக்களின் நலனை காப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் துரைமுருகன்
- ஜப்பான் நாட்டில் இரு நாட்கள் பெய்த கனமழையால் அந்த நாட்டில் வெள்ளப்பெருக்கு - ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் பெய்ததால் விபரீதம்
- பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை வெடித்தது – நச்சுவாயு காரணமாக 2 ஆயிரம் பேர் வெளியேற்றம்
- அமெரிக்காவில் கலிபோர்னியால் விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion