ஆர்டர் போட்டது பச்சை பட்டாணி பனீர்.. வந்தது சிக்கன்.. ஹோட்டலுக்கு ரூ.20ஆயிரம் அபராதம்!
குவாலியரில் பிரபலமான ஹோட்டலான ஜிவாஜி கிளப்பில் இருந்து வழக்கறிஞர் சித்தார்த் ஸ்ரீவஸ்தவா உணவு விநியோக செயலியான Zomato மூலம் (மட்டர் பனீர்) பச்சை பட்டாணியிட்ட பனீரை ஆர்டர் செய்துள்ளார்.
சொமேட்டோவில் வந்த ஒரு ஆர்டருக்கு தவறுதலாக உணவை மாற்றி அனுப்பியதால் ஹோட்டலுக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது. சைவ உணவு உண்ணும் குடும்பத்திற்கு தவறுதலாக அசைவ உணவை அனுப்பியதால் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்தேறி உள்ளது. தவறுதலாக வேறு உணவை பெற்ற குடும்பத்தினர், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் புகார்தாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சைவ உணவுக்கு பதிலாக சிக்கன் கிரேவி
குவாலியரில் பிரபலமான ஹோட்டலான ஜிவாஜி கிளப்பில் இருந்து வழக்கறிஞர் சித்தார்த் ஸ்ரீவஸ்தவா உணவு விநியோக செயலியான Zomato மூலம் (மட்டர் பனீர்) பச்சை பட்டாணியிட்ட பனீரை ஆர்டர் செய்துள்ளார். இவர்களது குடும்பம் சைவ உணவு மட்டுமே உண்ணும் குடும்பம் ஆகும். ஆர்டர் செய்த சைவ உணவுக்குப் பதிலாக ஜிவாஜி கிளப்பில் இருந்து சிக்கன் கிரேவி வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார்
இந்த விவகாரத்தை ஜிவாஜி கிளப் நிர்வாகிகளிடம் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதால் மனஉளைச்சல் அடைந்துள்ளார். சரிவர பதிலளிக்கவில்லை என்பதால், நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஸ்ரீவஸ்தவா. இந்த உத்தரவு குடும்பத்தினருக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் கருத்து
ஹோட்டல் நடத்துபவர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இது முற்றிலும் அலட்சியமாக இருப்பதாகவும் நுகர்வோர் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு புகார்தாரரால் பல நாட்கள் சாப்பிட முடியவில்லை என்றும், இந்த சம்பவம் குடும்பத்தை உணர்ச்சி ரீதியாக பாதித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் குடும்பத்தில் எல்லோரும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அபராதம் விதித்து தீர்ப்பு
நீதிமன்ற உத்தரவின்படி, ஜிவாஜி கிளப் ஹோட்டலுக்கு ரூ.20000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வழக்கை எதிர்த்துப் போராடுவதற்கு புகார்தாரர் செலவழித்த செலவையும் கிளப் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்