Gujarat rath yatra: மொபைல் ப்ளூடுத்! இது ரோபோடிக் ரத யாத்திரை! ரோட்டில் சர்ரென சென்ற குட்டி தேர்!
ரோபோ தேரில் வீதி உலா வந்து ஜெகநாதருக்கு வழிபாடு செய்த குஜராத நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ரோபா தேர்:
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த நபர் வெள்ளிக்கிழமை தனது சொந்த 'ரோபோடிக் ரத யாத்திரையை' தெருக்களில் எடுத்து வீதி உலா வந்தார். இந்து கடவுளான ஜகந்நாத்தின் 145வது ரத யாத்திரையின் மகத்தான கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் வீதிகளில் உலா வந்தார். அப்போது மந்திரங்கள் ஓதியும், மணிகள் ஒலித்தும் உலா வந்தனர்.
Gujarat | Vadodara's Jai Makwana pays a robotic tribute to Lord Jagannath calling it an amalgamation of science & traditions
— ANI (@ANI) July 2, 2022
"This robotic rath yatra is a modern-day celebration of the festival with the Lord manifesting in front of devotees on a robotic rath," he said (1.07) pic.twitter.com/R4YmasCSKQ
அறிவியல் மற்றும் பாரம்பரியங்களின் கலவை:
ரோபாட்டிக் ரத யாத்திரை குறித்து, அதை உருவாக்கிய ஜெய் கூறியதாவது, ரத யாத்திரையானது மனிதர்கள் கயிறு கட்டி இலுக்க தேவையில்லை. மேலும் ரோபோ ரத யாத்திரையை, மொபைல் உள்ள ப்ளூடூத் மூலம் இணைத்து கொண்டு இயக்கலாம். இது பாரம்பரியத்தையும் அறிவியலையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பார்த்தும் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்