Watch video: ஜிம்மில் தொடர்ச்சியான பயிற்சி.. பத்தே நிமிடத்தில் நிகழ்ந்த மரணம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஜிம் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஜிம் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை அடுத்த ஷாலிமார் கார்டன் பகுதியை சேர்ந்தவர் 33 வயதான ஆதில். இவர் அதே பகுதியில் ஜிம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 7 மணியளவில் ஆதில், வழக்கம்போல பயிற்சி மேற்கொண்டு சோர்வாக இருப்பதாக கூறி தனது அலுவலகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்போது அவரது உதவியாளர்கள் அருகில் அமர்ந்து ஆதில் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென நாற்காலியில் அமர்ந்தபடி பின் நோக்கி விழுந்துள்ளார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் உதவியாளர்கள் உடனடியாக ஆதிலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனையிட்ட மருத்துவர்கள் ஆதில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, உடலை பெற்றுக்கொண்டனர்.
एक और मौत LIVE-
— Narendra nath mishra (@iamnarendranath) October 19, 2022
कल ग़ाज़ियाबाद में 35 साल का एक जिम ट्रेनर सामान्य दिनों की तरह अपनी कुर्सी पर बैठा और वहीं हार्ट अटैक से उसकी मौत हो गई। सेकंड में मौत pic.twitter.com/7TX5di258X
இதுகுறித்து ஆதில் குடும்பத்தார் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது குடும்பத்தார் எவ்வளவோ தடுத்து தினந்தோறும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்துள்ளார், இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி செய்தபோது அவருக்கு அதிகபடியான சோர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துள்ளார். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வேளையில் ஆதிலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே மரணித்துள்ளார். இறந்த ஆதிலுக்கு நான்கு குழந்தைகள் மற்றும் மனைவி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மாரடைப்பால் மரணித்தபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மாரடைப்பு
ஒரு பக்கம் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் அதே வேளையில், அதிக அளவு உடற்பயிற்சி மேற்கொள்வது அதை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், டைப் 2 நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தல், குறைவான உடல் செயல்பாடு, குடும்ப வரலாறு, உடல் பருமன் போன்றவற்றால் இதய நோய்கள் வயது வித்தியாசமின்றி அதிகரித்துவருவதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
முன்பெல்லாம், மாரடைப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்டவரை முன் அறிகுறிகளுடன் வந்துகொண்டிருந்த நிலையில், எந்தவித அறிகுறிகளுமின்றி சமீப காலமாக ஏற்படும் மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் மரணங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இச்சூழலில் திடீரென ஏற்படும் இந்த மாரடைப்பு உயிரிழப்புகளைத் தடுக்க நம் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டுமெனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
- புகைபிடிப்பதற்கு எவ்வளவு சீக்கிரம் குட்பை சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்லுங்கள்.
- தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள், ஆனால் கூட, குறைய இல்லாமல் அளவாக செய்யுங்கள்.
- ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுங்கள்.அதிக உப்பு மற்றும் சர்க்கரையைக் குறையுங்கள். சரியான உடல் எடையைப் பேணுங்கள்.
- நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் உறங்குங்கள். நல்ல உறக்கத்தை பேணுபவர்களுக்கு ரத்த அழுத்தம் , சர்க்கரை நோய்கள், மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகிறது.
- மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், பல உடலுக்கு கேடான பழக்கங்களுக்கு முதலில் வித்திடுவது மன அழுத்தமே.
- ரத்த அழுத்த அளவை தொடர்ந்து கண்காணியுங்கள், 18 - 39 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் ரத்த அழுத்த அளவை கண்காணியுங்கள்.
- இவை தவிர கொழுப்பு, சர்க்கரை அளவையும் கண்காணித்து சரிவர பேணுங்கள்.
உங்கள் அன்றாட வாழ்வில் இந்த 7 மாற்றங்களைக் கொண்டு வந்து இருதயத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.