சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை! தனியார் மருத்துவமனைக்கும் உத்தரவு போட்ட ஒன்றிய அரசு

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சாலை விபத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பை அடுத்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலவச சிகிச்சை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம்வரை இலவசம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.
2030க்குள் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இலக்கு எனவும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நம்மை காக்கும் 48 திட்டத்தில் ஏற்கெனவே இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)




















