மேலும் அறிய

நெகிழ்ச்சி... மகளின் முதல் மாதவிடாய்; கேக் வெட்டிக் கொண்டாடிய தந்தை!

பெண்களே மாதவிடாய் குறித்து பேச அசிங்கப்படுவதும், அது அருவருப்பான ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. முதல் மாதவிடாயை விழாவாக கொண்டாடும் சில குடும்பங்கள் அடுத்தடுத்த மாதங்களில் அதை தீட்டாக பார்க்கின்றன.

தனது மகளின் முதல் மாதவிடாய் தருணத்தை உறவுகள் மற்றும் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடிய தந்தைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மாதவிடாய் என்றாலே தீட்டு என்று கூறி முகத்தை சுளித்து கொள்ளும் கலாச்சாரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டால் பெண்கள் வீட்டு அடுப்பறைக்குள் செல்ல கூடாது, இறை வழிபாட்டு தளங்களுக்கு செல்ல கூடாது, ஒதுங்கி இருக்க வேண்டும் உள்ளிட்ட அவசியமற்ற கட்டுப்பாடுகளை ஒருசிலர் இன்றும் பின்பற்றி வருகின்றனர். அண்மையில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில், கிராமம் ஒன்றில் மாதவிடாய் ஏற்படும் பெண்களை தனியாக ஒதுக்கி வைத்து ஒரு வீட்டில் தங்க வைக்கும் சம்பிரதாயத்தை கடைப்பிடித்து வருவதாக கூறப்பட்டது. 

பெண்களே மாதவிடாய் குறித்து பேச அசிங்கப்படுவதும், அது அருவருப்பான ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. வயதுக்கு வந்தவுடன் மாதவிடாயை விழாவாக கொண்டாடும் சில குடும்பங்கள் அடுத்தடுத்த மாதங்களில் அதை தீட்டாக பார்க்கின்றன. மாதவிடாய் மீதான இப்படிப்பட்ட சமூக பார்வை மாற வேண்டும் என்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இசை ஆசிரியர் ஒருவர், தனது மகளின் முதல் மாடவிடாய் நிகழ்வை விழாவாக கொண்டாடியுள்ளார். 

உத்தரகாண்ட் மாநிலம் உதாம் சிங் நகரை சேர்ந்த ஜிதேந்திர பத் என்பவர் தனது பேஸ்புக்கில், தனது மகளின் முதல் மாதவிடாயை கொண்டாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரின் 13 வயதான ரோகிணி பருவம் அடைந்துள்ளார். தன் மகளுக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்த ஜித்தேந்திர பத், நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார். ரோகிணியின் நண்பர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டனர்.

சிகப்பு நிற வெல்வெட் கேக் மீது ஹேப்பி பீரியட்ஸ் ரோகிணி என எழுதப்பட்டு அந்த கேக்கை வெட்டி பெற்றோர் இருவரும் தங்கள் மகளுக்கு ஊட்டினர். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த நண்பர்கள், ரோகிணிக்கு நாப்கின்களை பரிசாக வழங்கினர்.

இது குறித்து பேசிய ஜித்தேந்திர பத், ”மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக நடைபெறும் ஒரு சுழற்சி, அதை மறைக்கவும் தீட்டு என தள்ளி வைக்கவும் ஒன்றும் இல்லை. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே எனது மகளின் முதல் மாதவிடாய் நிகழ்வை விழாவாக கொண்டாடினேன்” என்றார். 

ஜிதேந்திர பத்தின் இந்த செயலுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து கூறி வருவதுடன், தாங்களும் தங்கள் வீட்டு பெண்களை ஒதுக்கி வைக்கமாட்டோம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Embed widget