பாகிஸ்தானில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்: பிரதமர் மோடி செல்லாதது ஏன்...உறுதியாக இருக்கும் இந்தியா
பாகிஸ்தானுடன் மீண்டும் உரையாடலைத் தொடங்க இந்த வாய்ப்பை பயன்படுத்த போவதில்லை என்றும், இந்த பயணமே SCO கூட்டத்திற்காகத்தான் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 23வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றார்.
SCO கூட்டமைப்பின் கூட்டம்:
SCO கூட்டமைப்பின் 23வது கூட்டமானது, பாகிஸ்தான் தலைமையில் நாளை ( 16 அக்டோபர் ), இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. SCO கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து முடிவு எடுக்கப்படும். இக்கூட்டமானது, பாகிஸ்தானில் நடைபெறுவதால் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. சமீப காலம் வரை பாகிஸ்தான் நாட்டுடனான உறவானது மோசமடைந்து வருகிறது.
இருப்பினும், இந்த கூட்டமானது, பல நாடுகள் பங்கேற்கவுள்ளதால், அந்நாடுகளுடனான உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
#WATCH | EAM Dr S Jaishankar arrives in Rawalpindi, Pakistan for the 23rd Meeting of SCO Council of Heads of Government.
— ANI (@ANI) October 15, 2024
(Source: PTV) pic.twitter.com/BMIxwWWINk
முதல் பயணம்:
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணமானது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக, இவரின் முதல் பயணமாகும். அவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியுறவு செயலாளராக பாகிஸ்தான் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான தளத்தில் வந்திறங்கிய வெளியுறவுத்துறை அமைச்சரை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் (தெற்காசியா) இல்யாஸ் மெஹ்மூத் நிஜாமி வரவேற்றார்.
2016 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளும் முறையான உரையாடல்களை நிறுத்தியிருந்தாலும், இந்த விஜயம் இருதரப்பு உறவுகளில் ஒருவிதமான உருக்குலைந்ததாகக் கருதப்படுகிறது.
”பாகிஸ்தானுடனான உரையாடலே கிடையாது”
பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு முன் ஜெய்சங்கர் தெரிவித்ததாவது “ பாகிஸ்தானுடன் மீண்டும் உரையாடலைத் தொடங்க இந்த வாய்ப்பை பயன்படுத்த போவதில்லை என்றும், இந்த பயணமே SCO கூட்டத்தில் பங்கேற்பதற்காக மட்டுமே என கூறியிருந்தார்.
2001 இல் ஆரம்பிக்கப்பட்ட SCO கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுவாகும்.
Also Read: Samsung protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்