இந்த மாநிலத்தில் எல்லா குற்றங்களுக்கும் காரணம் போதைப் பொருட்களே: மத்திய அமைச்சர் சொன்னது என்ன?
கோவாவில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் காரணம் போதைப் பொருட்களே என்று மத்திய அமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
கோவாவில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் காரணம் போதைப் பொருட்களே என்று மத்திய அமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். ஆனால் மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் போதைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளும் குறைந்து மாநிலத்தில் சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பிரமோத் சவந்துக்கு பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக நேற்று கோவா மாநில அரசு, பொது இடங்களில் மது அருந்துதல், சமைத்தல், பிச்சை எடுத்தல், முறையான அனுமதியில்லாமல் வாட்டர் ஸ்போர்டிங் நடத்துதல், க்ரூயிஸ் ஷிப்களை இயக்குதல் ஆகியனவற்றிற்கு தடை விதித்தது. மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக பேசிய வடக்கு கோவா பாஜக எம்பியும் மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சருமான ஸ்ரீபத் நாயக் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில சுற்றுலா துறை சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பாராட்டினார்.
இன்று கோவா வருகை தந்த மத்திய அவர், கோவா மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு குற்றங்களுக்கும் மதுவும், போதைப் பொருட்களும் தான் காரணம். ஆனால் மாநில அரசு சுற்றுலாவை சீரமைக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு அதனை ஆதரிக்கும் என்றார்.
கோவா சுற்றுலா துறை இயக்குனர் நிகில் தேசாய் பிறப்பித்த உத்தரவில், மாநில அரசின் புதிய விதிகளின்படி சுற்றுலா தலங்களில் பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள், மது அருந்துபவர்கள், போதையை பயன்படுத்துபவர்கள்,
அனுமதியில்லாமல் வாட்டர் ஸ்போர்ட் நடத்துபவர்கள், சாலையோரங்கள் சமையல் செய்பவர்கள், மாநிலத்திற்கு வெளியே அண்டை மாநிலங்களில் சொகுசுக் கப்பல் பார்ட்டி போன்றவற்றிற்கான டிக்கெட்டுகளை விற்பவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
சோனாலி மரணமும் அதிரடி நடவடிக்கைகளும்..
கடந்த ஆகஸ்ட் 23 அன்று வடக்கு கோவாவில் உள்ள அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனையில் நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத் இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. . பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் நிறைய காயம் இருப்பது தெரியவந்தது, அதைத் தொடர்ந்து கோவா போலீசார் கொலை வழக்கை பதிவு செய்தனர்.
கோவா காவல்துறை ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் சாந்த் நகரில் உள்ள சோனாலியின் இல்லத்திற்குச் சென்று மூன்று டைரிகளைக் கைப்பற்றியது. சோனாலியின் படுக்கையறை, அலமாரி மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாக்கப்பட்ட லாக்கர் ஆகியவற்றை போலீஸ் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், சோனாலி போகட் வீட்டில் இருந்த லாக்கருக்கும் போலீசார் சீல் வைத்தனர். ஒரு கிளப்பில் நடைபெற்ற பார்ட்டியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சோனாலியின் இரண்டு உதவியாளர்களை கைது செய்துள்ளனர்.
சோனாலி போகட்டின் மரணம் தொடர்பாக வெளியான பிரதேசப் பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் அளவுக்கு அதிகமான போதை மருந்து இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சோனாலி போகத்தின் இரண்டு உதவியாளர்கள் சோனாலிக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுத்ததாக கோவா காவல்துறை கூறியது.
டிக்டாக் வீடியோக்களால் புகழ் பெற்ற சோனாலி போகத், 2019 ஹரியானா தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார், ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வியடைந்தார். அவர் 2020 இல் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். அவரது மரணத்திற்குப் பின்னர் சுற்றுலா துறையை ஒழுங்குபடுத்த ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.