"சோலியை முடிச்ச சோலி கே பாட்டு" மேடையிலே நின்ற கல்யாணம் - மனம் உடைந்த மாப்பிள்ளை!
திருமண மேடையில் மணமகன் நடனம் ஆடிய காரணத்திற்காக மணமகளின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலத்தில் மணமகனும், மணமகளும் திருமண மேடையில் நடனமாடுவது மிக மிக இயல்பான ஒன்றாக உள்ளது. இதை இரு வீட்டு குடும்பத்தினரும் மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், டெல்லியில் இந்த நடனமே மணமகனுக்கு வில்லனாக மாறியுள்ளது.
டான்ஸ் ஆடிய மாப்பிள்ளை:
டெல்லியில் திருமணம் ஒன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு இருந்தது. அப்போது, பிரபல இந்தி பாடலான சோலி கே பீச்சே பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது, மணமகனின் நண்பர்கள் அந்த பாடலுக்கு நடனமாடினர். அவர்கள் மணமகனையும் நடனமாட உற்சாகப்படுத்தினர். மணமகன் தொடக்கத்தில் நடனம் ஆடவில்லை. பின்னர், நண்பர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தியதால் அவரும் நடனம் ஆடியுள்ளார்.
கல்யாணத்தை நிறுத்திய மணமகள் தந்தை:
இந்த நிகழ்வை அங்கே இருந்த மணமகளின் தந்தை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு மணமேடையில் மணமகன் ஆடியது பிடிக்கவில்லை. தனது உறவினர்கள் முன்னிலையில் மணமகன் மேடையிலே நடனமாடியதால் தனது குடும்பத்தின் கெளரவம் குறைந்துவிட்டதாக கருதியுள்ளார்.
இதனால், இப்படிப்பட்ட மணமகனுக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மணமகன் மேடையில் நடனம் ஆடிய விதம் பிடிக்காத காரணத்தாலே அவர் திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், அவரை மணமகனும், மணமகன் வீட்டாரும் இது கேளிக்கைக்காகவே நடந்த நடனம் என்ற சமாதனப்படுத்தினர். ஆனாலும், அவர் சமாதானம் அடையவே இல்லை.
மணமகன் வேதனை:
இதனால், வேறு வழியின்றி இந்த திருமணம் நின்றுபோனது. இதனால், மணமகனும் அவரது நண்பர்களும் மிகவும் வேதனை அடைந்தனர். மணமேடை வரைச் சென்று மணமகன் நடனம் ஆடியதால் திருமணத்தை நிறுத்திய சம்பவம் டெல்லியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருமணம் என்றாலே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும் விழாவாகத்தான் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினருக்கு இருக்கும். பணச் சிக்கல் உள்ளிட்ட பல இன்னல்களை எதிர்கொண்டாலும் திருமணத்தை சுமூகமாக நடத்தி முடிக்கவே இரு குடும்பத்தாரும் முயற்சிப்பார்கள். இதற்காக பல விஷயங்களை சாமர்த்தியமாக அவர்கள் கையாள்வார்கள்.
இன்று மிகவும் சகஜமான ஒரு விஷயத்திற்காக திருமணத்தையே நிறுத்தியிருப்பதற்கு நெட்டிசன்கள் மணமகளின் தந்தையை விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

