DA hike: தீபாவளி போனஸ் - மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன் பயனாளர்களுக்கு ஜாக்பாட் - 3% அகவிலைப்படி உயர்வு
DA hike: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
DA hike: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன், அகவிலைப்படி (DA) 42% ஆக இருந்தது. மத்திய அரசு தற்போது வழங்கிய ஒப்புதலை தொடர்ந்து, ஜூலை 1, 2024 முதல் அகவிலைப்படி ஆனது 45 சதவிகிதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
3% அகவிலைப்படி (DA) அதிகரிப்புடன், தொடக்க நிலை மத்திய அரசு ஊழியர், மாதத்திற்கு சுமார் ரூ. 18,000 தொடக்கச் சம்பளத்துடன், ஜூலை 1, 2024 முதல் மாதத்திற்கு சுமார் ரூ.540 அதிகமாக பெறுவார். ஊழியருக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத நிலுவைத் தொகை ஒட்டுமொத்தமாக சேர்ந்து கிடைக்கும். இந்த தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான நன்மைகளை சேர்க்கும்.
வேலை செய்யும் ஊழியர்கள் DA பெறும் போது, ஓய்வூதியம் பெறுவோர் அகவிலை நிவாரணம் பெற தகுதி பெறுகின்றனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதத்துக்கான DA திருத்தமானது 4% உயர்வுடன் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 50% DA பெற தகுதி பெற்றனர். அதே சமயம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 50% DR பெற தகுதி பெற்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள் 1 கோடி பேருக்கு பலன்:
ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய அமைப்பில் அகவிலைப்படி (DA) முக்கிய பங்கு வகிக்கிறது. இது பணவீக்கத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பை வழங்குகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (CPI) சம்பளத் திருத்தங்களைச் செய்வதன் மூலம், பணவீக்கத்தின் போது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப, ஊழியர்களின் இழப்பீட்டுத் தொகையானது ஒரு நிதி நிலைத்தன்மையை வழங்குகிறது.
ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மத்திய அரசால் ஆண்டுக்கு இருமுறை அதிகரிக்கப்படுகிறது. அது ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அமல்படுத்தப்படுகிறது. பொதுவாக மார்ச் மற்றும் செப்டம்பரில் அறிவிப்புகள் வெளியிடப்படும். ஜனவரி டிஏ உயர்வு பொதுவாக மார்ச் மாதத்தில் ஹோலி நேரத்தில் அறிவிக்கப்படும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பரில் தீபாவளியை ஒட்டி ஜூலை உயர்வு அறிவிக்கப்படும்.