Watch Video: பைக்கில் பறந்து ஸ்டண்ட் செய்தபடி ஃபோட்டோஷூட்; இணையத்தை பதறவைத்த ஜோடி!
விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள ஜோடி ஒன்று தங்கள் திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்புக்காக காற்றில் பைக் ஸ்டண்ட் செய்வது போல் நிகழ்த்திய ஃபோட்டோஷூட் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பதறவைத்துள்ளது.
திட்டமிடல் தொடங்கி பெண் பார்ப்பது, நிச்சயம், நலுங்கு என இந்தியத் திருமணங்கள் பொதுவாக ’மிக நீண்டதொரு ப்ராசஸ்’ ஆகவே விளங்குகின்றன.
அதுவும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் pre wedding photoshoot எனப்படும் திருமணத்துக்கு முந்தைய ஃபோட்டோசூட், ப்ரைடல் ஷவர் ஆகியவை, பாரம்பரியங்கள் தாண்டி என அனைத்து தரப்பினரின் திருமணங்களிலும் அத்தியாவசியமான கொண்டாட்ட நிகழ்வுகளாக மாறிவிட்டன.
தாங்கள் தனித்து தெரிய பல ஜோடிகள் வித்தியாசமான ஃபோட்டோஷூட்டுகளை மேற்கொண்டு இணைய உலகில் லைக்ஸ் அள்ளி வருகின்றனர்.
அந்த வகையில் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள ஜோடி ஒன்று தங்கள் திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்புக்காக காற்றில் பைக் ஸ்டண்ட் செய்வது போல் நிகழ்த்திய ஃபோட்டோஷூட் கவனம் ஈர்த்துள்ளது.
ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், மணமகன் மற்றும் மணமகள் போல் உடையணிந்தபடி, இந்த ஜோடி பைக்கில் அமர்ந்தபடி ஸ்டண்ட் செய்து, க்ரேன் உதவியுடன் காற்றில் பறப்பது போல் ஃபோட்டோஷூட் நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.
pre-wedding shoots - i’m getting this pic.twitter.com/Ynwf7Kxr6a
— Best of the Best (@bestofallll) October 27, 2022
பைக்கில் அமர்ந்தபடி எஸ்யூவி கார் ஒன்றை ஜோடியாகக் கடப்பது போல் இவர்கள் எடுத்துள்ள இந்த ஃபோட்டோஷூட் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
தூம் 2 படத்தில் ஐஸ்வர்யா ராய், ஹ்ரித்திக் ரோஷன் ஜோடி ஸ்டண்ட் செய்தது போல் இந்த ஜோடி பதிவிட்டுள்ள இந்த வீடியோவுக்கு, தூம் 4 கப்பிள் என நெட்டிசன்கள் ரகளையான கமெண்டுகள் பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர். ஸ்டண்டுகள் எப்போது பரிந்துரைக்கு உரியதும் இல்லை
முன்னதாக இதேபோல் அஸ்ஸாமில் ஒப்பந்தத் திருமணம் செய்துகொண்ட ஜோடியின் வீடியோ இணையத்தில் வைரலானது.
அதன்படி, மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும், கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும், ஞாயிறு காலை உணவை கணவர் செய்ய வேண்டும், வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்த உண்ண வேண்டும், பார்ட்டிகளில் நல்ல புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என பல விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
View this post on Instagram
இந்த ஒப்பந்தத்தில் மணமக்கள் கையொப்பமிட்டு திருமணம் செய்துகொள்ளும் இந்த வீடியோ இணையத்தில் ஒருபுறம் சிரிப்பையும் மறுபுறம் விமர்சனங்களையும் பெற்று வைரலானது.