Coronavirus LIVE Updates: சென்னையில் அதிக பரிசோதனை காரணமாக தொற்று எண்ணிக்கை உயர்கிறது - அமைச்சர்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்புமருந்து வழங்கும் சேவையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் இந்த சேவை வழங்கப்படுகிறது.
Kerla Covid-19 Cases கேரளா மாநிலத்துக்கு 6 பேர் கொண்டக் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது
Central Government is sending 6 member team to Kerala headed by NCDC Director.
— Mansukh Mandaviya (@mansukhmandviya) July 29, 2021
As large number of COVID cases are still being reported in Kerala, the team will aid state’s ongoing efforts in #COVID19 management.
நோய்த் தடுப்புக்கான தேசிய மைய இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்டக் குழுவை மத்திய அரசு கேரளாவிற்கு அனுப்புகிறது. கேரளாவில் இன்னும் கொரோனாத் தொற்று அதிகமாக உள்ளது, கொவிட்-19-ஐ கட்டுப்படுத்த அம்மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இக்குழு உதவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
Namakkal Vaccination: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கோவாச்சின் இரண்டாவது தடுப்பூசி போடப்படுகிறது
நாமக்கல் மாவட்டத்தில் கோவாச்சின் தடுப்பூசி இன்று இரண்டாவது தவணை செலுத்தும் இடங்கள்:
சென்னையில் கொரோனா பரிசோதனைகள் கூடுதலாக உள்ளது - மா.சுப்பிரமணியன்
சென்னையில் கொரோனா பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ENgland Vaccine passport: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தடுப்பூசிகளுக்கு அனுமதி
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் இருந்து இங்கிலாந்திற்கு வரும் போது தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
US COvid Data Tracker : கடந்த 24 மணி நேரத்தில் 88,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 88,376 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும்.