Corona Vaccination | கோவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசிக்கான கால அவகாசம் நீட்டிப்பு..
பிரிட்டனில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்த இடைவெளி பரிந்துரைக்கப்படவில்லை.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் போடப்படுவதற்கு இடையிலான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி கொரோனாவுக்கு எதிராகச் செலுத்தப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இதுவரை 6-8 வாரகால இடைவெளிவிட்டுப் போடப்பட்டன.தற்போது இதனை 12-16 வாரகால இடைவெளியாக இவை அதிகரிக்கப்பட்டுள்ளன.
#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) May 13, 2021
Gap between two doses of #Covishield Vaccine extended from 6-8 weeks to 12-16 weeks based on recommendation of #COVID19 Working Group.https://t.co/e0GKVQ6Vi5 pic.twitter.com/do7DNoGkUY
மருத்துவர் என்.கே.அரோரா தலைமையிலான கொரோனா பணிக்குழு இதனை அரசுக்குப் பரிந்துரைத்திருந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் , மருத்துவர் வி.கே.பால் தலைமையிலான கொரோனா கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்குழுவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. பிரிட்டனில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்த இடைவெளி பரிந்துரைக்கப்படவில்லை.