மேலும் அறிய

"குன்னூர் பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது" - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது.

தமிழ்நாட்டின் பல்வேறு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் சுற்றுலாவிற்காக குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு வருவது வழக்கம்.

குன்னூர் பேருந்து விபத்து:

அந்த வகையில், நேற்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் நீலகிரிக்கு வந்ததால், போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 57 சுற்றுலா பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் சுற்றுலா பேருந்தில் நீலகிரிக்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளனர். பின்னர், அப்பேருந்தில் தென்காசிக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் நிதின் (15), தேவிகலா (36), முருகேசன் (65), முப்புடாதி (67), கெளசல்யா (29), இளங்கோ (64), செல்வன் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட 30 க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி:

இந்த நிலையில், குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில்,  "தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. 

அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருடன் நினைவை பகிர்ந்து கொள்கிறேன். விபத்தில் சிக்கியவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து குன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து காரணமாக உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget