Manishankar Aiyer | திடீரென தலைப்பு இல்லாமல் பகிரப்பட்ட மணிஷங்கர் அய்யர் புகைப்படங்கள்...! குழப்பத்தில் நெட்டிசன்கள்..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் புகைப்படத்தை நான்கு மாநில காங்கிரஸ் கட்சிகள் திடீரென பகிர்ந்ததால் காங்கிரஸ் தொண்டர்களும், நெட்டிசன்களும் குழப்பமடைந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மணிஷங்கர் அய்யர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நான்கு மாநில ட்விட்டர் பக்கத்தில் மணிஷங்கர் அய்யர் புகைப்படம் நேற்று இரவு திடீரென பகிரப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் டுவிட்டர் பக்கம், தெலுங்கானா காங்கிரஸ், சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் டுவிட்டர் பக்கம், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ட்விட்டர் பக்கம் என்று நான்கு மாநிலங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் மணிசங்கர் அய்யர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
இந்த புகைப்படத்தின் கீழ் எந்த படக்குறிப்பும், விளக்கமும் நான்கு மாநில காங்கிரஸ் சார்பிலும் எழுதப்படவில்லை. எந்தவித பட விளக்கமும் இல்லாமல் திடீரென பகிரப்பட்ட மணிசங்கர் அய்யர் புகைப்படத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் குழப்பம் ஏற்பட்டது. மேலும், இதனால் நெட்டிசன்களும் காரணம் தெரியாமல் குழம்பினர்.
https://t.co/uX9I7mGzZo pic.twitter.com/y770zuw3gy
— Telangana Congress (@INCTelangana) February 7, 2022
https://t.co/RSOK7tqv5b pic.twitter.com/3obk6gXyhO
— INC Chhattisgarh (@INCChhattisgarh) February 7, 2022
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை மிகவும் விமர்சித்து பேசினார். குறிப்பாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லை, ஆனால், ஆணவம் மட்டும் குறையவில்லை என்று விமர்சித்து பேசியிருந்தார். இது காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில்தான், மணிசங்கர் அய்யர் புகைப்படத்தை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர் கடந்த 2017ம் ஆண்டில், பிரதமர் மோடியை பாராட்டி பேசியிருந்தார். இதையடுத்து, அவரை 9 மாதங்கள் கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யர் நீக்கப்பட்டார். இதையடுத்து, 2018ம் ஆண்டு அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.
— UP Congress (@INCUttarPradesh) February 7, 2022
https://t.co/Z9fD45Y7uY pic.twitter.com/cQq3dvYruv
— Rajasthan Pradesh Congress Sevadal (@SevadalRJ) February 7, 2022
தற்போது 80 வயதான மணிஷங்கர் அய்யர் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் பிறந்தவர். குடியுரிமை பணியில் தேர்ச்சி பெற்று மணிசங்கர் அய்யர் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக 1991, 1999 மற்றும் 2004ம் ஆண்டு மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2010 முதல் 2016ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்