(Source: ECI/ABP News/ABP Majha)
kerala Landslide:வயநாடு நிலச்சரிவு; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ராகுல், பிரியங்கா காந்தி!
kerala Landslide: வயநாடு நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று பார்வையிட்டனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கேரளாவில் பெருமழை பெய்து வருகிறது, கடந்த ஜூலை 30-ம் தேதி வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாட்டின் முண்டகை, மேப்பாடி மற்றும் சூரல்மலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவு கடுமையான பாதிப்பை எற்படுத்தியது. பலரும் மாயமாகினர். இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கனமழையுடன் கூடிய நிலச்சரிவால், முண்டக்கை மற்றும் சூரல்மலையை இணைக்கும் பாலம் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மீட்பு பணிகள் சவாலாக மாறியுள்ள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவ வீரர்கள் ஆகியோர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
View this post on Instagram
வயநாடு சென்ற ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வயநாடு சென்றனர். சூரமளா, மெப்படியில் உள்ள மருத்துவன்மனை, அங்குள்ள மருத்துவ முகாம் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல், பிரியங்கா இருவரும் ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்ட்டனர். காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில் பொதுச் செயலாளரும், ஆலப்புழா எம்.பி. கே.சி. வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரு ராகுல், பிரியங்கா காந்தி உடன் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2019-ம் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். 2024-ம் தேர்தலும் வெற்றி பெற்றார். இருப்பினும் உத்தர பிரதேச மாநிலத்தின் ரபேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால் அதன் எம்.பி.யாக தொடர்கிறார். வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தில் பிரியங்கா காந்தி போட்டியிட இருக்கிறார்.
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளைப் பார்வையிட்ட பிறகு ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில்,” வயநாட்ட்டில் ஏற்பட்டுள்ள பெருந்துயர் காட்சிகள் வேதனையளிப்பதாக உள்ளது. இடர்மிகுந்த காலத்தில் நானும் பிரியங்காவும் வயநாடு மக்களுக்கு உறுதுணையாய் இருப்போம்.இங்கு நடைபெறும் மீட்பு பணிகள், நிவாரண நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து வரும் பேரிடர் நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக திட்டமிடுதல் தேவைப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | In Wayanad, Congress MP & LoP Lok Sabha Rahul Gandhi says, "It is a terrible tragedy for Wayanad, for Kerala and the nation. We have come here to see the situation. It is painful to see how many people have lost family members and their houses. We will try to help and… pic.twitter.com/puqOMWRBYC
— ANI (@ANI) August 1, 2024
எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட்டப்ப பின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி பேசுகையில்,” வயநாடு நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரையில் இது தேசிய பேரிடர் என்று சொல்வேன். அரசு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். ஏராளமானோர் சக குடும்ப உறுப்பினர்களை, வீடுகளை இழந்துள்ளனர். இங்குள்ள சூழலில் மக்களிடன் என்ன பேசுவதென்று தெரியவில்லை; அவர்களின் இழப்பிற்கு ஆறுதல் சொல்வது எளிதானது அல்ல. பாதிக்கப்பட்டவர்களை தேவையானவை கிடைக்க நாங்க உதவுவோம். பேரிடன் காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பேரிடர் மிட்புக் குழுவினர். வயநாடு மாவட்ட நிர்வாகம், தன்னார்வளர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
உதவி எண்கள்:
- மீட்பு உதவிகள் தேவைப்படுவோர் 1077 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைக்கலாம் என வயநாடு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ளது
- தேசிய சுகாதார இயக்கம் 9656938689 / 8086010833
- மாவட்ட அவசர செயல்பாட்டு மையம் - 04936 204151 / அலைபேசி : 9562804151, 8078409770 .
- சுல்தான் பத்தேரி தாலுக்கா: அவசர செயல்பாட்டு மையம் - 04936 223355 (அ) 04936 220296
- மந்தவாடி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையம் - 04935 241111, 04935 240231 / அலைப்பேசி 9446637748
- வைத்திரி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையம் - 04936 256100 / அலைப்பேசி எண்கள்: 8590842965, 9447097705