Online Delivery Cobra: மக்களே உஷார்..! அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் பாம்பு வீடியோ
Amazon Package Snake: அமேசானில் இருந்து வந்த டெலிவெரி பெட்டியில், நாகப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Amazon Package Snake: அமேசானில் இருந்து வந்த டெலிவெரி பெட்டியில், நாகப்பாம்பு இருந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமேசான் டெலிவெரி பெட்டியில் விஷ நாகம்:
திடுக்கிடும் நிகழ்வுகளின் வரிசையில் ஒன்றாக பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினர், சமீபத்திய அமேசான் டெலிவரியைப் பெற்றபோது எதிர்பாராத ஆச்சரியத்தை எதிர்கொண்டுள்ளனர். ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு திறக்கப்பட்ட பெட்டியில், விஷநாகம் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Karnataka | A couple from Bengaluru found a spectacled cobra in their Amazon package containing an Xbox controller. The snake was stuck to the packaging tape.
— ANI (@ANI) June 19, 2024
(Source: Screengrabs from a viral video) pic.twitter.com/cf69RxuyW7
டெலிவெரி பெட்டியில் நாகம்:
பெங்களூருவில் சர்ஜாபூர் சாலையில் வசிக்கும் ஒரு குடும்பம், கேமிங் சாதனத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து இருந்தது. அமேசானின் கொரியர் சேவையால் உடனடியாக டெலிவரி செய்யப்பட்ட பெட்டியை ஆவலுடன் பெற்றுள்ளனர். இருப்பினும், அந்த பெட்டியின் டேப்பில் பாம்பின் தோல் மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த நொடி அந்த பெட்டியில் பாம்பு இருப்பதை கண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Damn!! Amazon delivery in Bengaluru comes with a twist: a surprise snake! 📦🐍 Looks like they're now offering 'Prime Serpent' service. Just when you thought you've seen everything.pic.twitter.com/km3NWWxE60
— Maverick (@MaverickBunny) June 18, 2024
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
இதையடுத்து பாம்புடன் சேர்த்து அந்த டெலிவெரி பெட்டியை வீடியோ எடுத்த பயனாளர், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அமேசான் டெலிவெரி நிறுவனத்திற்கு புகாரும் அளித்துள்ளார். தற்போது அந்த விடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பெட்டியில் இருந்து இந்திய நாகப்பாம்பு ஆகும். இது இந்திய துணைக் கண்டத்தில் பரவலாக காணப்படும் ஒரு விஷப் பாம்பு. இதன் விஷம் ஒரு சக்திவாய்ந்த நியூரோடாக்சின் ஆகும். இது சுவாச மண்டலத்தை பாதிக்கலாம், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பக்கவாதம் அல்லது மரணம் கூட ஏற்படலாம்.