CM Stalin: டெல்லியில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு என்ன?
CM Stalin: இன்று காலை அவர் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்ததை தொடர்ந்து பிரதமர் மோடியையும் சந்தித்தார்.
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுப் பரிவு வழங்கினார். உடல் ஆரோக்கியத்தைப் பேணி காக்க உதவும் வகையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
தானியங்கள் அடங்கிய பரிசுப் பெட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமருக்கு வழங்கிய தானியங்கள் அடங்கிய பரிசுப் பெட்டியில் என்னென்ன தானியங்கள் இருந்தது என்று தெரியுமா?
மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்பு கவுணி, கேழ்வரகு, கம்பு, சீரக சம்பா, சாமை, தினை, வரகு ஆகியவைகள் இருந்தன.
Met Hon'ble @PMOIndia and discussed key issues pertaining to the development of Tamil Nadu.
— M.K.Stalin (@mkstalin) August 17, 2022
As I thanked him for having inaugurated the #ChessOlympiad2022, Hon'ble PM appreciated the grand manner in which TN hosted the event and conveyed that it was a proud moment for India. pic.twitter.com/GbZkXSVcoQ
மு.க.ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை அவர் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார்.
முதலில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின், நீட் விலக்கு, காவிரி, புதிய கல்வி கொள்கை, மேகதாது விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட, தற்போது மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான மசோதா போன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பட்டியலையும் பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் படிக்க: Krishna Jayanthi Pooja: கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை... எப்படி கொண்டாடுவது?
மேலும், கச்சத்தீவு இலங்கையிடம் இருந்து மீட்பது, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுத்தல், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை கைவிட வேண்டும், தேசிய கல்விக் கொள்கை, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு மாநில அரசின் எதிர்ப்பு போன்றவற்றை பற்றியும் பேசியுள்ளார்.
சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்த சந்திப்பில், நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை காவிரி விவகாரம், மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு, நதிநீர் இணைப்பு, கட்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சாரத் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுதல் போன்ற தேவைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது,
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்