மேலும் அறிய

பென்சில், ரப்பர், Maggi.. பிரதமர் மோடிக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையின் கோரிக்கை.. வைரலாகும் கடிதம்

பென்சில், ரப்பர், மேகி போன்ற பொருட்களின் விலையை குறைக்க ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதம்

பென்சில், ரப்பர், மேகி போன்ற பொருட்களின் விலையை குறைக்க ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இந்த கடிதம் மிகவும் வைரலாகி வருகிறது. 

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினால், பென்சில், ரப்பர், மேகி போன்றவை உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருடகாளுக்கான விலையும் உயர்ந்தது. தற்போது பொன்சில் விலை உயர்ந்துள்ளதை அடுத்து, ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயதுக் குழந்தை கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். உத்திரப் பிரதேசம், கன்னோஜ் மாநிலத்தினைச் சேர்ந்தவர், விஷால் டூபே. வழக்கறிஞரான இவரின் ஆறு வயதுக் குழந்தை, கீர்த்தி டூபே. ஒன்றாம் வகுப்பு படிக்கும் இவர் பள்ளியில் பென்சிலை தொடர்ந்து தவற விட்டுள்ளார். இதனால் தனது அம்மாவிடம், பென்சில் வாங்கித் தரச் சொல்லி கேட்டு தனது அம்மாவிடம் திட்டும் வாங்கியுள்ளார். தனது அம்மா தன்னை கடுமையாக திட்டுவதற்கான காரணம், ஜிஎஸ்டி உயர்வால் பென்சில், ரப்பர் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது தான் என்பதை புரிந்து கொண்ட கீர்த்தி டூபே பிரதமர் மோடிக்கு பென்சில், ரப்பர், மேகி போன்றவற்றின் விலையைக் குறைக்க கோரிக்கை கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்தக் கடித்தத்தில், 

எனது பெயர் கீர்த்தி டூபே. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது நீங்கள் ஏற்படுத்தியுள்ள விலைவாசி உயர்வால், பென்சில், ரப்பர் போன்றவைகளின் விலை அதிகரித்துள்ளது. நான் எனது அம்மாவிடம் பென்சில் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டால் அவர் என்னை அடிக்கிறார். எனது பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகள் எனது பென்சிலை திருடிவிடுகிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த மேகியின் விலையையும் அதிகரித்து விட்டீர்கள், இப்போது நான் என்ன செய்ய? என தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியும் உள்ளார். குழந்தை கீர்த்தி டூபே இந்த கடிதத்தினை இந்தி மொழியில் எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் நாடு முழுவதும் வேகமாக வைரல் ஆகி வருகிறது. 

மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடுத்து பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. அந்த வரிசையில் அறிவியல் உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் அதிகரித்துள்ளது.  அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் நடைபெற்றதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய பொருட்களின் மீது 5% ஜிஎஸ்டி விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த ஜிஎஸ்டி விகித உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த கடிதத்தினை சுட்டிக்காட்டி மக்களவையில், ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்த விவாதத்தின்போது, மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார்.  மற்ற குழந்தைகள் பென்சிலை வாங்க முடியாமல் திருடும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது மத்திய அரசு என கூறியுள்ளார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget