Telangana child marriage in pandemic | கொரோனா காலத்தில் அதிகரிக்கும் சிறார் திருமணங்கள்..
ஏப்ரல் 2020 – மே 2021 காலக்கட்டத்தில் மட்டுமே அங்கே சிறார் திருமணம் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த விவரத்தை அந்த மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கமிஷன் வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தெலங்கானா மாநிலத்திலிருந்து சிறார் திருமணம் மற்றும் பெண்கள் கட்டாயத் திருமணம் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் 2020 – மே 2021 காலக்கட்டத்தில் மட்டுமே அங்கே சிறார் திருமணம் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த விவரத்தை அந்த மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வது நிரந்தரமாகத் தடைபட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிள்ளைகள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே கண்டுபிடிக்கமுடியவில்லை எனப் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. இத்தனைக்கும் 2018-2019 காலக்கட்டத்தில்தான் அங்கே அதிகபட்சமாக 10.91 லட்சம் பேர் மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.