மேலும் அறிய

"உங்கள எச்சரிக்கிறேன்" வழக்கறிஞரால் டென்சனான தலைமை நீதிபதி சந்திரசூட்.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!

உச்ச நீதிமன்றத்தில் நீட் தொடர்பான விசாரணையின்போது வழக்கறிஞருக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையை நடந்த காரசார விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் தொடர் சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில், மனுதாரர்களில் ஒருவருக்காக வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை ஆஜரானார்.

மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரேந்திர ஹூடா பேசும்போது, மேத்யூஸ் நெடும்பாறை இடைமறித்து பேசினார். அப்போது, ஹூடாவுக்கு பிறகு பேசுமாறு தலைமை நீதிபதி கேட்டு கொண்டார். ஆனால், தான்தான் இங்கு மூத்த வழக்கறிஞர் என மேத்யூஸ் நெடும்பாறை பதில் அளித்தார்.

இதனால் கடும் கோபம் அடைந்த தலைமை நீதிபதி சந்திரசூட், "நான் உங்களை எச்சரிக்கிறேன். நீதிபதிகளிடம் அப்படி பேசக்கூடாது. இந்த நீதிமன்றத்திற்கு நான்தான் பொறுப்பு. பாதுகாப்பு அதிகாரிகளை அழைப்பு விடுக்கிறேன். அவரை, இங்கிருந்து அகற்றுங்கள்" என உத்தரவிட்டார்.

கடும் கோபம் அடைந்த தலைமை நீதிபதி: இதற்கு, "நானே இங்கிருந்து செல்கிறேன்" என மேத்யூஸ் நெடும்பாறை பதில் அளித்தார். உடனே, "நீங்கள் அதை சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் செல்லலாம். கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை நான் பார்த்து வருகிறேன். இந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது" என சந்திரசூட் எதிர்வினையாற்றினார்.

"நான், 1979ஆம் ஆண்டு முதல் பார்த்து வருகிறேன்" என மேத்யூஸ் நெடும்பாறை கூறினார். இதற்கு, "நியாயமற்ற உத்தரவை வெளியிட வேண்டியிருக்கும்" என தலைமை நீதிபதி மீண்டும் எச்சரித்தார். இறுதியில், நீதிமன்றத்தில் இருந்து மேத்யூஸ் நெடும்பாறை வெளியேறினார்.

நீட் தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையை நடந்த காரசார விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜியோ 10-வது ஆண்டு கொண்டாட்டம்! வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் சலுகைகள் அறிவிப்பு!
ஜியோ 10-வது ஆண்டு கொண்டாட்டம்! வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் சலுகைகள் அறிவிப்பு!
இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPFO வெளியிட்ட புதிய அப்டேட்! விவரம் இதோ..
இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPFO வெளியிட்ட புதிய அப்டேட்! விவரம் இதோ..
கிரிவலம் சென்ற ஆனந்த் அம்பானி.. ஆன்மீக பயணத்திற்கு தாத்தா, பாட்டியே காரணம் என நெகிழ்ச்சி
கிரிவலம் சென்ற ஆனந்த் அம்பானி.. ஆன்மீக பயணத்திற்கு தாத்தா, பாட்டியே காரணம் என நெகிழ்ச்சி
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
Delimitation Bill: பாஜக-விற்கு ஆதரவு எதிரொலி; மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா திமுக?
Delimitation Bill: பாஜக-விற்கு ஆதரவு எதிரொலி; மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா திமுக?
திமுகவிற்கு குட்பாய் சொல்லும் முன்னாள் அமைச்சர்? ”நரித்தனத்திற்கு தென்மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது”
திமுகவிற்கு குட்பாய் சொல்லும் முன்னாள் அமைச்சர்? ”நரித்தனத்திற்கு தென்மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது”
TVK Vs DMK: உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Embed widget