Chandrayaan-3 LIVE Updates: சீறிப்பாய்ந்த சந்திரயான்.. மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்..
சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அது பற்றிய தகவல்களை உடனுக்குடன் இங்கு அறியலாம்.
LIVE

Background
ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது : சந்திரயான் குறித்து பிரதமர் மோடி பேச்சு
#WATCH | PM Narendra Modi says, "Today, on the successful launch of #Chandrayaan3, the entire India is excited. This is a major achievement of our scientists. In the arena of Space, India and France have had an old and deep cooperation. There have been new agreements between our… pic.twitter.com/Y21EBWOxWU
— ANI (@ANI) July 14, 2023
சீறிப்பாய்ந்த சந்திரயான்
Glimpses of today's LVM3-M4/Chandrayaan-3 mission#Chandrayaan3 #ISRO pic.twitter.com/K269GiWKza
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) July 14, 2023
விடாமுயற்சிக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி வாழ்த்து..!
"சந்திரயான்-3 இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் கொண்டு உயர செல்கிறது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தங்களின் விடாமுயற்சிக்கும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன்!" என இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கனவுகள், பெருமை, நம்பிக்கையை சுமந்து செல்லும் சந்திரயான் - 3: சச்சின் டெண்டுல்கர்
"இஸ்ரோவின் விண்கலம் 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகள், பெருமை மற்றும் நம்பிக்கையை சுமந்து செல்கிறது. சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டதால், நம் அனைவரின் இதயங்களும் பெருமிதத்தால் பெருக்குகிறது. அயராத முயற்சிக்கு நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத நாள். ஜெய் ஹிந்த்!" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தேசத்திற்கு வரலாற்று வெற்றி: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து..!
"நிலவை ஆய்வு செய்யும் நமது மூன்றாவது விண்கலமான சந்திரயான் - 3 வெற்றிகமராக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம். அதன் வெற்றிகரமான பயணத்தின் பின்னால் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது நமது தேசத்திற்கு ஒரு வரலாற்று வெற்றியாகும். ஏனெனில், இந்த பணி விண்வெளி ஆராய்ச்சியில் அற்புதமான முடிவுகளை கொண்டு வரும்" என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

