மேலும் அறிய

Chandrayaan 3: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3- இந்த தேதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

நிலவின் தென் திருவத்தை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட சதிரயான் - 3  வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

நிலவின் தென் திருவத்தை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட சதிரயான் - 3  வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

சந்திரயான் திட்டம்: 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.

சந்திரயான் – 2 ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திராயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியானஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

இந்த முறை எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்காக ஏற்கனவே இரண்டு முறை சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 சோதனை ஓட்டம்

இந்தியாவின் நிலவு பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சந்திரயான்-3 முதல்  சோதனை ஓட்டம் வெற்றிகரமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை செயல்படுத்தப்பட்டது.  

EMI-EMC சோதனையானது, விண்வெளி சூழலில் செயற்கைக்கோள் துணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் மின்காந்த நிலைகளுடன் அவற்றின் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இந்தச் சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என்று இஸ்ரோ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

3 முக்கியப் பகுதிகள்

சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் எஞ்சினின் சோதனை  அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. மகேந்திரகிரியின் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இச்சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் பாயும் சந்திராயான் 3:

சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும்  42 நாட்கள் பயணத்துக்கு பின்னர் லேண்டர் ஆகஸ்ட் 22-ம் தேதி விண்ணில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் - 3 திட்டம் வெற்றி பெற்றால் நிலவை பற்றிய பல்வேறு ரகசியங்கள் தெரிய வரும் என நம்பப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget