Breaking News Tamil LIVE : பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது.. கலால் வரியை குறைத்தது மத்திய அரசு
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.

Background
பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது.. கலால் வரியை குறைத்தது மத்திய அரசு
பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது.. கலால் வரியை குறைத்தது மத்திய அரசு
பேரறிவாளன் விடுதலை : மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஆலோசனை
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
மே 24ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வருகிற மே 24ம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி நினைவு இடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி நினைவஞ்சலி!
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 31 வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, விஜய் வசந்த், முன்னாள் தலைவர் தங்க பாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் கட்சியினர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா கண்டுபிடிப்பு
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வரை கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

