Breaking News LIVE: ஆருத்ரா நிறுவனத்தில் ரூ. 3.41 கோடி பறிமுதல்..!
Breaking News LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

Background
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு..!
2 ஆண்டுகளுக்கு சமையல் எண்ணெய்க்கான சுங்கவரியை ரத்து செய்துள்ளது மத்திய அரசு
ஆருத்ரா நிறுவனத்தில் ரூ. 3.41 கோடி பறிமுதல்..!
ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கவனக்குறைவாக உள்ளனர் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகியுள்ளது. சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன், 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாக இருப்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்துவைத்தார். ஜீன் மாதம் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பது இது 11 முறை ஆகும். இன்னும் மூன்று நாட்களில் மேட்டூர் அணையில் நீர் கல்லணையை அடையும்.