Breaking News LIVE: பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் இம்ரான் கான் திட்டவட்டம் !
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE
Background
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 106.66க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறிக்கொண்டிருக்கும் சூழலில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்றும் 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 107.45க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் டீசல் விலை நேற்று லிட்டருக்கு ரூபாய் 97.52க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 97.52க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 9வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டேன் - இம்ரான் கான் திட்டவட்டம்
பாகிஸ்தான் நாட்டு பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை - நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி
மேகதாது அணை விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார் - முதல்வர்
டெல்லி பள்ளிகளை நாளை பார்வையிட உள்ளேன் - முதல்வர் ஸ்டாலின்
டெல்லி முதல்வருடன் இணைந்து மருத்துவமனை, பள்ளிகளை நாளை பார்வையிட உள்ளேன் - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் - முதல்வர் ஸ்டாலின்
கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை எடுப்பதால பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் - முதல்வர் ஸ்டாலின்
நீட் பிரச்னையை அழுத்தமாக பதிவு செய்தேன் - முதல்வர் ஸ்டாலின்
நீட் பிரச்னையை பிரதமர் மோடியிடம் அழுத்தமாக பதிவு செய்தேன் - முதல்வர் ஸ்டாலின்