Breaking Tamil LIVE: கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெற இணையதள முகவரி அறிவிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 557 தேர்வு மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வானது மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை தரம்சாலா மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற போட்டியில் தோற்ற சென்னை அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியின் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கலாம் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மற்றொரு போட்டியில் லக்னோ - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
- போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் நேற்று கோவை காவல்துறையால் கைது செய்யபட்டார். தேனியில் கைது செய்யப்பட்ட அவரை கோவை அழைத்து வரும்போது வாகனம் விபத்துக்குள்ளானது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு கோவை கொண்டு செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 17 ஆம் தேதி நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் தமிழ்நாட்டில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெற இணையதள முகவரி அறிவிப்பு
கொடைக்கானல் செல்ல இ - பாஸ் பெற இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெயிலானது 16 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது
தமிழ்நாட்டில் இன்று வெயிலானது, 16 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
Breaking Tamil LIVE: நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது - 557 நகரங்களில் மாணவர்கள் பங்கேற்பு
நாடு முழுவதும் 557 நகரங்களில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது - தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
Breaking Tamil LIVE: திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை - பக்தர்கள் அவதி
கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகளவு பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில் கடற்கரை பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Breaking Tamil LIVE: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் வெப்ப நிலை குறைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.