Breaking News LIVE: ஜாமினில் வெளியே வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
அட்சய திரிதியை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் விஷேச நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாள் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. அதேசமயம் இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது.
22 காரட் மதிப்பு கொண்ட தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் கொண்ட தங்கம் விலை கிராம் ரூ.7,130 ஆகவும், சவரன் ரூ.57,040 ஆகவும் விற்பனையாகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. காலை 9.30 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
10 ஆம் வகுப்பு தேர்வினை, 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர்.
Brij Bhushan Singh Cases Filed : ப்ரிஷ் பூஷண் சிங் மீது பதிவான வழக்குகள்
Delhi court frames charges against BJP leader Brij Bhushan Singh in the case of sexual harassment of five female wrestlers. He has also been charged with the offence of outraging the modesty of woman. The court has found sufficient material to frame charges against Brij Bhushan.… pic.twitter.com/5hHtUlCDyj
— ANI (@ANI) May 10, 2024
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிப்போம் - மல்லிகார்ஜுன கார்கே வாக்குறுதி
#WATCH | Hyderabad, Telangana: Congress national president Mallikarjun Kharge says, "We are giving the guarantee of apprenticeship to the youth. We will also provide those 30 lakh vacant posts in government to the youth... We will give 50% reservation to women in government… pic.twitter.com/0dMYagQ02D
— ANI (@ANI) May 10, 2024
CM Stalin - Kejriwal : உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான திரு. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது மக்களாட்சியை வலிமைப்படுத்தியுள்ளது.
திரு. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் வேகத்தை இது கூட்டியுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்
திகார் ஜெயிலுக்கு வெளியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்.. சிறிது நேரத்தில் கெஜ்ரிவால் பிணையில் வெளிவர இருக்கிறார்
VIDEO | Security beefed up outside #TiharJail in Delhi. CM Arvind Kejriwal, who was granted interim bail by the #SupremeCourt, is likely to be released from the jail later today.
— Press Trust of India (@PTI_News) May 10, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/eDtV1FoIIz
பிணையில் வெளிவரும் ஜெக்ரிவாலை பார்க்க, திகார் ஜெயிலுக்கு செல்லும் சுனிதா ஜெஜ்ரிவால் : வீடியோ
#WATCH | Delhi CM Arvind Kejriwal's wife Sunita Kejriwal along with their daughter leaves from CM's residence for Tihar Jail.
— ANI (@ANI) May 10, 2024
The CM was granted interim bail by the Supreme Court till June 1. pic.twitter.com/B2CAM3yF4s