Breaking News LIVE :பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடுமுழுவதும் எங்கு பார்த்தாலும் மக்களவை தேர்தலுக்கான பணிகளே மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளுக்கு எந்த சின்னங்கள் என்று நேற்று வரை தெரியாமல் இருந்த நிலையில், மதிமுகவுக்கு தீப்பெட்டி, விசிகவுக்கு பானை மற்றும் ஓபிஎஸுக்கு பலாப்பழ சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
இப்படி தமிழ்நாட்டில் ஒருபுறம் நிகழ்வுகள் நடக்க, ரூ.1823 கோடி வருமான வரி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. இதுபோக, கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி மெகா பேரணியை நடத்துகிறது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் திருப்பதை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் விறுவிறுக்கு மத்தியில் ஐபிஎல் 2024ம் இந்தியாவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஒரு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத இருக்கின்றன. மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
நேற்றைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை பந்தாடி வெற்றியை ருசித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் லக்னோ அணிக்காக நேற்றைய போட்டியில் அறிமுகமான மயாங்க் யாதவ் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி முக்கிய விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
அவதூறு குதிரையில் பயணிக்கும் பா.ஜ.க. - மு.க.ஸ்டாலின்
அவதூறு குதிரையில் பா.ஜ.க. பயணிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பேசியுள்ளார்.
காங்கிரஸ் போட்டியிடும் 9 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு வரலாற்றை பிரதமர் முழுமையாக படிக்க வேண்டும் - செல்வப் பெருந்தகை
கச்சத்தீவு வரலாற்றை பிரதமர் மோடி முழுமையாக படிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கரூரில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் - தேர்தல் அதிகாரி
கரூரில் அதிகபட்சமாக 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.