மேலும் அறிய

Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..

Background

  • ஹரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் – மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
  • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல மாவட்டங்களில் நேற்று இரவு கொட்டித் தீர்த்தது கனமழை
  • தமிழ்நாட்டில் நேற்று பல இடங்களில் மழை பெய்த நிலையில், இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • பிரதம மந்திரி கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 18வது தவணை நிதி இன்று விடுவிப்பு
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 24 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் – காவல் ஆணையர் அருண் அதிரடி
  • உத்தரகாண்ட் மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மீது சைபர் கிரைம் தாக்குதல் – குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் நடவடிக்கை
  • உலகளாவிய ஸ்திரத்தன்மையற்ற சூழலிலும் இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்
  • உலகின் பல நாடுகள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளது – பிரதமர் மோடி
  • மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கை அறைக்குள் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் நுழைந்த விவகாரம் – காங்கிரஸ் கடும் கண்டனம்
  • இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
  • தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
  • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று ஆலை நிர்வாக ஊழியர்கள் நெருக்கடி – தொழிலாளர்கள் வேதனை
  • புனேவில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளின் புகைப்படம் வெளியீடு
  • பெங்களூரில் உள்ள கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
  • தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க. பல் பிடுங்கப்பட்டட பாம்பாக ஆட்சியில் உள்ளது – திருமாவளவனன் விமர்சனம்
  • எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் மாநிலங்களில் உள் ஒதுக்கீடு செல்லும் – உச்சநீதிமன்றம் உத்தரவு
  • புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருது குரங்கு பெடல் படத்திற்கு வழங்கப்பட்டது –விருதை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
  • மகளிர் டி20 உலகக்கோப்பை நியூசிலாந்து அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது இந்தியா
11:26 AM (IST)  •  05 Oct 2024

திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலையில் 1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் தயார் செய்யும் விதமாக ₹13.45 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகுளமாதா ஒருங்கிணைந்த சமையற்கூடத்தை திறந்து வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

10:21 AM (IST)  •  05 Oct 2024

அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்துக்கொள்ளலாம்!

ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்துக்கொள்ளலாம்!

10:01 AM (IST)  •  05 Oct 2024

ஹரியானாவில் காலை 9 மணி வரை 9.53 சதவீத வாக்குகள் பதிவு

ஹரியானாவில் காலை 9 மணி வரை 9.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

09:38 AM (IST)  •  05 Oct 2024

மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி 2024!  போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன?

மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி 2024! 

போக்குவரத்து மாற்றங்கள்: 

காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு.
 
திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி செல்ல வாகனங்களுக்கு தடை. அதற்கு பதிலாக, சர்தார் படேல் ➙ சாலை காந்தி மண்டபம் வழியாக அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.

பாரிஸில் இருந்து காமராஜர் சாலை வழியாக திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை. மாறாக, அண்ணாசாலை ➙ தேனாம்பேட்டை ➙ காந்தி மண்டபம் வழியாக திருவான்மியூர் செல்லலாம். 

MTC பேருந்துகள் அண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, RK சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை. ஆர்.கே.சாலை. கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் வணிக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை!

08:45 AM (IST)  •  05 Oct 2024

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
Rasipalan December 25: கும்பத்திற்கு அதிக செலவு; மீனத்திற்கு நண்பர்களின் ஆதரவு- உங்க ராசி பலன்?
Rasipalan December 25: கும்பத்திற்கு அதிக செலவு; மீனத்திற்கு நண்பர்களின் ஆதரவு- உங்க ராசி பலன்?
Thiruppavai 10: ”கும்பகர்ணன் போல தூங்குகிறாயே தோழி”  நகைச்சுவையாக எழுப்பும் ஆண்டாள்..விரிவாக படிக்க
Thiruppavai 10: ”கும்பகர்ணன் போல தூங்குகிறாயே தோழி” நகைச்சுவையாக எழுப்பும் ஆண்டாள்..விரிவாக படிக்க
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
Embed widget