Breaking News LIVE: வரும் 24ல் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் - இபிஎஸ் அறிவிப்பு
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
- முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கீடு செய்ததை காட்டிலும் 7 மடங்கு அதிகளவில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு – முதலமைச்சருக்கு ரயில்வே அமைச்சர் பதில்
- கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
- கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; மருத்துவமனை முன்னாள் தலைவரிடம் நான்காவது நாளாக விசாரணை
- கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை; கைதான சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி
- 23ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி; யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த திட்டம்
- ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு; ரவுடி ஆற்காடு சுரேஷ் மனைவி கைது
- நில மோசடி புகார்; கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் அனுமதி
- நடிகர் விஜய் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் சந்திப்பு
- காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; ஹமாஸ் ஏற்கவும் வலியுறுத்தல்
- உலகம் முழுவதும் தென்பட்ட சூப்பர் நீல நிலவு – கண்டுகளித்த மக்கள்
- ஆவணி மாத பௌர்ணமி; கோயில்களில் குவிந்த பக்தர்கள் – திருவண்ணாமலையில் நாலரை மணி நேரம் காத்திருந்து வழிபாடு
வரும் 24ல் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் - இபிஎஸ் அறிவிப்பு
மதுரையில் வரும் 24ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு https://t.co/wupaoCz9iu | #ADMK #Madurai #tamilnadu #tamilnews pic.twitter.com/VOso5DcyXk
— ABP Nadu (@abpnadu) August 20, 2024
மகளிர் டி20 உலக கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் - ஐசிசி அறிவிப்பு
கொல்கத்தா விவகாரம் : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நாளை போராட்டம்
கொல்கத்தா மருத்துவ மாணவி உயிரிழப்பு விவகாரம் : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ச்சி - பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்
முன்னெப்போதும் இல்லாத வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 வழிகாட்டி ஆலோசகர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம்!
முன்னெப்போதும் இல்லாத வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 வழிகாட்டி ஆலோசகர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம்.
— M.K.Stalin (@mkstalin) August 20, 2024
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத்
தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி… pic.twitter.com/VuxZLSkrBy
தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் குரங்கு அம்மை தொடர்பாக முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆப்பிரிக்கா கண்டத்தில் தொற்றானது பரவி வரும் நிலையில், அதுதொடர்பாக தமிழ்நாடு அளவில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
TAMIL NADU HEALTH DEPARTMENT HOLDS A REVIEW MEETING ON MONKEY POX#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @TNDPHPM pic.twitter.com/xNyOKreymc
— TN DIPR (@TNDIPRNEWS) August 20, 2024