Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Breaking News LIVE 12th Nov 2024: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE
Background
- சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
- தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு
- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பல வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளதால் மக்கள் பீதி
- விஸ்தாரா நிறுவனத்தின் கடைசி விமானம் நேற்று இந்தியாவில் இருந்து லண்டன் புறப்பட்டது – இன்று முதல் ஏர் இந்தியா பெயரில் இயங்கும்
- இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல்; உயிர் பீதியில் மக்கள்
- ஹிஸ்புல்லா தாக்குதல் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை தப்பியோட்டம்
- கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் வினித் கோயல் சதி – விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் ராய் பரபரப்பு குற்றச்சாட்டு
- கேரளாவில் மதரீதியாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கிய விவகாரம் – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
- அசாம் மாநிலத்தில் ரூபாய் 7 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
- ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு; நேற்று மாலையுடன் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை
- தெலுங்கு பேசும் மக்கள் மீது சர்ச்சை பேச்சு; நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
- கனடாவில் கோயில்கள், இந்திய தூதரகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் – காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்சிங் பன்னுன் மிரட்டலால் பரபரப்பு
- பிரதமரின் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வரும் 15ம் தேதியே கடைசி நாள் – வேளாண் துறை அறிவுறுத்தல்
- கலைமாமணி விருது பெற்ற விகேடி பாலன் நேற்று இரவு காலமானார்
- குஜராத்தில் இந்தியன் ஆயில் ஆலையில் சுத்திகரிப்பு பிரிவில் வெடிவிபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்கள்
Breaking News LIVE: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - ஆடுகளுக்கு இலை வெட்டும்போது நேரந்த சோகம்
ராமநாதபுரம் கமுதி அருகே இடையன்குளத்தில் மின்சாரம் தாக்கி செல்வகுமார் என்பவர் உயிரிழந்தார். மரத்தில் ஏறி ஆடுகளுக்கு இலை வெட்டும்போது மின்கம்பி மீது அரிவாள் உரசி மின்சாரம் பாய்ந்து செல்வகுமார் உயிரிழந்தார்.
Breaking News LIVE: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மழை காலத்தில் ஒக்கியம் மடுவில் தடை ஏதுமின்றி, பக்கிங்காம் கால்வாய் வழியாக மழை நீர் கடலில் கலப்பதை உறுதி செய்ய, மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை சட்டப்பூர்வமாக கையகப்படுத்தி, பள்ளிக்கரணையிலிருந்து வருகிற நீர்வழிப்பாதை அகலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம், வேறு ஒரு கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை ரூ.30 லட்சம் செலவில் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான மிக முக்கியமான இப்பணிகளை இன்று மாலை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். இதனை விரைந்து முடித்திட ஆலோசனைகளை வழங்கினோம்.
மழை காலத்தில் ஒக்கியம் மடுவில் தடை ஏதுமின்றி, பக்கிங்காம் கால்வாய் வழியாக மழை நீர் கடலில் கலப்பதை உறுதி செய்ய, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
— Udhay (@Udhaystalin) November 12, 2024
தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை… pic.twitter.com/XH9nbEGdRK
வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
சென்னையில் மழை 5 - 10 நிமிடங்கள் இருக்கும். வீட்டிற்கு செல்ல அவசரப்பட வேண்டாம். காத்திருந்து செல்லலாம். இரவு போக போக மேகங்கள் உருவாகி மழை இருக்கும். அதிகாலை முதல் அலுவலக நேரம் வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
KTCC Rain update
— Tamil Nadu Weatherman (@praddy06) November 12, 2024
----------
Night time poga poga clouds will form and spells will happen with breaks. Early morning to office time remains the ideal time for widespread rains.
Now the spell in Chennai will be 5-10 mins spells dont be hasty to head home, one can wait and go. pic.twitter.com/ihfeDfGefR
Breaking News LIVE : ஆசிரியர் நியமனம் - உயர்நீதிமன்றம் கேள்வி
ஆசிரியர் நியமனம் செய்யும்போது அவர்களின் குற்றப்பின்னணியை ஏன் காவல்துறை மூலம் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நவம்பர் 26ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தேர்வுக்கு தகுதித் தேர்வுடன் போட்டித் தேர்வும் நடத்தப்படும் என 2018ல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. அதற்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கலிடம் அவர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கேட்கப்படுதவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.