Breaking Live : கோவிட் - 19 தொற்று அதிகரிப்பு : தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது மத்திய அரசு
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
காமன்வெல்த் போட்டியில் நேற்று மட்டும் இந்தியா 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்று அசத்தியது.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்தியா சார்பில் இன்று ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ), ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். மகளிர் பிரிவில் சாக்ஷி மாலிக்(62 கிலோ), அன்ஷூ மாலிக் (57கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா பங்கேற்றார். இவர் இறுதிப் போட்டியில் கனடாவின் லால்சலன் மெக்நிலை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே பஜ்ரங் புனியா ஆதிக்கம் செலுத்தினார். அவர் கனடா வீரரை லாவகமாக எதிர்கொண்டு வேகமாக புள்ளிகளை பெற்றார். இறுதியில் 7-2 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதன்மூலம் காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தங்கம் வென்று பஜ்ரங் புனியா அசத்தியுள்ளார்.
முன்னதாக மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் அன்ஷூ மாலிக் நைஜீரியாவின் ஒடுயான்யோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய நைஜீரிய வீராங்கனை ஓடுயான்யோ 7-3 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக்கை வீழ்த்தினார். இதன்காரணமாக அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
முன்னதாக ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மோஹித் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இவர் அரையிறுதிப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாயை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அவர் 12-2 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் மோஹித் வெண்கலப் பதக்க போட்டியில் சண்டை செய்ய உள்ளார். அதேபோல் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்கரன் காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இவர் ரெபிசார்ஜ் ரவுண்டில் வெற்றி பெற்று தற்போது வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.
Covid 19 : கோவிட் -19 தொற்று அதிகரிப்பு : தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது மத்திய அரசு
Covid 19 : கோவிட் -19 தொற்று அதிகரிப்பு : தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது மத்திய அரசு
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி
மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
வருமான வரித்துறை சோதனை : ரூபாய் 200 கோடி கண்டுபிடிப்பு
திரைப்பட ஃபைனான்சியர், தயாரிப்பாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூபாய் 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தகைசால் தமிழர் விருதுக்கு நல்லக்கண்ணு தேர்வு..!
தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இருமடங்காக உயர்வு - தமிழக அரசு ஆணை
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.