மேலும் அறிய

Let Terrorist : லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி எங்க கட்சியைச் சேர்ந்தவரா? பாஜக கொடுத்த விளக்கம்..

பிடிப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் தலிப் ஹுசைன் ஷா. இவர் காஷ்மீர் பாரதிய ஜனதாவின் சிறுபான்மையினர் செல் தலைவராக இருந்தார் எனத் தகவல் வெளியாகி இருந்தது

காஷ்மீரில் பிடிபட்ட லஷ்கர் இ தாய்பா தீவிரவாதிகளில் ஒருவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்பதை அந்த மாநில பாரதிய ஜனதா தலைவர் ரவீந்தர் ரய்னா மறுத்துள்ளார். காஷ்மீரில் அண்மையில் பிடிப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் தலிப் ஹுசை ஷா. இவர் காஷ்மீர் பாரதிய ஜனதாவின் சிறுபான்மையினர் செல் தலைவராக இருந்தார் எனத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்றும் பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகள் பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம்சாட்டுவதை புதிய் யுத்தியாக கையாண்டு வருகின்றன என்றும் அந்த மாநில பாரதிய ஜனதா தலைவர் ரய்னா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தலிப் பாரதிய ஜனதா அலுவலகத்துக்கு இரண்டு முறை வந்துள்ளார் என்றும்.அவர் நேர்காணல் செய்யவே வந்தார் என்றும் அவருடன் வேறு சிலரும் வந்ததாகவும் ரய்னா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக,

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த காவல் அதிகாரி ரியாஸ் அகமது கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜுனைத் ஷீர்கோஜ்ரி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 

இதேபோல் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடைபெற்றது. இதில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாசில் நசீர் பட் மற்றும் இர்பான் அஹ் மாலிக் இருவரும் கொல்லப்பட்டனர். இவர்களும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரின் க்ரீஸ்பால் பால்போரா சங்கம் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் அடில் பர்ரே என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் பொதுமக்களும்,காவல் துறையினரும் சற்று நிம்மதியடைந்தனர்.

தலைப்பு செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget