மேலும் அறிய

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் - ராமேஷ்வரம் டூ காஷ்மீர், ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளம் என்ன?

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்காக, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கொண்டு வரப்பட்ட பொருட்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டு வந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது.

அயோத்தி ராமர் கோயில்:

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையயொட்டி இந்த கோயில் கட்டுமானம் எப்படி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது என்பது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்,காஷ்மீரின் பனி மூடிய சிகரங்கள் முதல் கன்னியாகுமரியில் சூரிய ஒளியில் நனைந்த கடற்கரைகள் வரை, ராமரின் பெயர் இந்தியா முழுவதும் பக்தியுடன் எதிரொலிக்கிறது. இப்போது, இந்தப் பக்தி அயோத்தியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோயிலின் வடிவத்தில் ஒரு உறுதியான வடிவத்தை எடுத்துள்ளது. கம்பீரமான இந்தக் கோயில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பக்தியின் அடையாளமாக  உறுதியுடன் நிற்கிறது. இது பிரமாண்டத்துடன் மட்டுமல்லாமல் மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து உருவாக்கப்பட்டதாகவும் உள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' முன்முயற்சி இந்த கருத்தை ஆழமாக எதிரொலிக்கிறது. மாநில எல்லைகளைத் தாண்டி, ஒரு கோயிலுக்கான கட்டுமானப் பயணத்தில் தேசத்தை இது ஒன்றிணைக்கிறது. 

பல்வேறு மாநிலங்களின் அடையாளம்:

ராஜஸ்தானின் மக்ரானா பளிங்குக் கல்லால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கோயிலின் மையப்பகுதி கம்பீரமாக நிற்கிறது. கர்நாடகாவின் சார்மௌதி மணற்கல், ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூரிலிருந்து இளஞ்சிவப்பு மணற்கல் நுழைவு வாயிலின் கம்பீரமான உருவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கம்பீரமான 2100 கிலோ அஷ்டதத்து மணி குஜராத் படைப்பாகும்.  அகில இந்திய தர்பார் சமாஜத்தால் வடிவமைக்கப்பட்ட 700 கிலோ ரதத்தையும் குஜராத் வழங்குகிறது.

ராமர் சிலைக்கு பயன்படுத்தப்படும் கருப்பு கல் கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்திலிருந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் கலை வண்ணத்துடன் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மரக் கதவுகள் தெய்வீக சாம்ராஜ்யத்தின் நுழைவாயில்களாகத் நிற்கின்றன.

கோயிலில் பயன்படுத்தப்படும் வெண்கல பயன்பாடுகள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவை.  மெருகூட்டப்பட்ட தேக்கு மரங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. ராமர் கோயிலின் கதை வெறுமனே பொருட்கள் மற்றும் புவியியல் தோற்றம் பற்றியது மட்டுமல்ல. இந்த புனிதமான முயற்சியில் இதயங்கள், ஆன்மாக்கள் இணைந்துள்ளன. திறன்களை வெளிப்படுத்தியுள்ள  ஆயிரக்கணக்கான திறமையான கைவினைஞர்களின் பணிகளுக்கும் இது சான்றாகும். ராமர் கோவில் என்பது அயோத்தியில் உள்ள அடையாளச் சின்னம் மட்டுமல்ல. நம்பிக்கையை ஒன்றிணைக்கும் சக்திக்கு இது ஒரு சான்று. ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு செதுக்கலும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு துணியும் புவியியல் எல்லைகளைக் கடந்து, ஒரு கூட்டு ஆன்மீகப் பயணத்தில் இதயங்களை ஒன்றிணைத்து, அவை 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற கதையைச் சொல்கின்றன” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகர்களின் பங்கு:

கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் - சீதை கருவறைகள், ராமரின் தம்பி லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகள் தயாராகி உள்ளன. இவற்றை மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையிலான,  50க்கும் மேற்பட்டோர் கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். இதனிடையே, அயோத்தி ராமர் கோயிலில் அபிஷேகம் செய்ய,  ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தீர்த்த கலசங்களை பிரதமர் மோடி கொண்டு சென்றதும் குறிப்பிடத்தகக்து.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்திTVK Vijay : தவெகவில் இணைந்த முக்கிய திரை பிரபலம்! கொண்டாடும் தொண்டர்கள்! வெளியான வீடியோ!Dhanush Aishwarya Divorce : ’’பசங்க என்கூட தான்’’ தனுஷ் ஐஸ்வர்யா மோதல்? முடிவுக்கு வந்த பஞ்சாயத்துFather Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Embed widget