இமாச்சல் நிலச்சரிவு..பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!
இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னாவூர் மாவட்டத்தில் நிகுல்சாரி அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 24 பேர் சென்ற பேருந்தும் பல்வேறு வாகனங்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளன.
இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னாவூர் மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில் இதுவரை 11 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 60 பேர் வரை சரிவுகளின் இடுபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் கூறியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னாவூர் மாவட்டத்தில் நிகுல்சாரி அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 24 பேர் சென்ற பேருந்தும் பல்வேறு வாகனங்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. பலி எண்ணிக்கை முதலில் பத்து என உறுதி செய்யப்பட்ட நிலையில் அது தற்போது 11 என உயர்ந்துள்ளது.
A landslide reported on Reckong Peo- Shimla Highway in #Kinnaur District in Himachal Pradesh today at around 12.45 Hrs. One truck, a HRTC Bus and few vehicles reported came under the rubble. Many people reported trapped. ITBP teams rushed for rescue. More details awaited. pic.twitter.com/ThLYsL2cZK
— ITBP (@ITBP_official) August 11, 2021
#Kinnaur landslide update: Wreckage of the Bus found by ITBP troops of 17, 18 & 43 Battalions at first light (0525 Hrs) at approx 500 meters below the road & 200 meters above Sutlej river. 1 more dead body retrieved. Total 11 dead bodies retrieved till now.#kinnaurlandslide pic.twitter.com/8VuQM2dtz0
— ITBP (@ITBP_official) August 12, 2021
நேற்று சுமார் 12:45 மணியளவில் சிம்லாவின் கின்னாவூர் என்.ஹெச் -5 சாலையில் பெரிய பாறைகள் மலைகளில் இருந்து சரியத் தொடங்கியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர். விபத்தில் முதல்கட்டமாக பேருந்தின் ஓட்டுநர் மகிந்தர் பால், கண்டக்டர் குலாப் சிங் உள்ளிட்ட 13 பேரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளது மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு.
Visuals of Drone camera of the landslide site in #Kinnaur, HP earlier today. The 200 meter stretch seen covered with rubble. 2 ITBP teams are searching for the ill fated Bus from different directions in the downslopes to the river bed.#kinnaurlandslide pic.twitter.com/UOvRHFn1PL
— ITBP (@ITBP_official) August 11, 2021
தொடர்ந்து சரிந்து வரும் கற்களால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் கூறியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீட்புப்பணிக்காக அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் ராணுவ ஹெலிகாப்டரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தாகூர் தெரிவித்துள்ளார். 200 ஜவான்கள் வரை மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Visuals of shooting stones and landslide at the landslide site near Nugalsari, Kinnaur, HP at 1300 Hrs today. 10 dead bodies have been retrieved so far from the rubble. 14 people have been rescued. #kinnaurlandslide #Kinnaur pic.twitter.com/iuEfLTPY6u
— ITBP (@ITBP_official) August 11, 2021