அடேங்கப்பா... ஒரு கிலோ தேயிலை ரூ.1.15 லட்சம்...! தொடர்ந்து 5 வருடமாக சாதனை படைக்கும் அசாம் கோல்ட் டீ..!
மென்மையான தளிர்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த அரிய தேநீர் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பறிப்பது முதல் உற்பத்தி வரை, திறமையான கைவினை கலைஞர்களால் செய்யப்படுகிறது.
மோனோஹரி டீ எஸ்டேட்டில் விளைந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மனோஹரி கோல்டு என்ற அரிய வகை தேயிலை ஏலத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.1.15 லட்சத்துக்கு ஏலம் சென்றுள்ளது. இந்த பிரீமியம் அசாம் தேநீர் ஹைதராபாத்தில் உள்ள நீலோஃபர் கஃபேவில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மனோஹரி கோல்ட் டீ
அஸ்ஸாமின் மிகவும் பிரபலமான மனோஹரி கோல்ட் டீ விற்பனையில் சாதனை படைத்தது குறித்து மோனோஹரி டீயின் நிர்வாக இயக்குனர் ராஜன் லோஹியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “கடந்த ஐந்து ஆண்டுகளாக, நாங்கள் மனோஹரி கோல்டு டீ-யை உற்பத்தி செய்து வருகிறோம், மேலும் இந்த தேயிலைக்கான தேவையும் விருப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 1 கிலோ தேயிலையை ரூ.1.15 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளோம். அஸ்ஸாம் மாநிலத்தின் தேயிலை தொழிலுக்கு இது ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாகும். கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் போர்ட்டல் மூலம் இந்த டீ விற்கப்பட்டது மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நீலோஃபர் கஃபே இதனை வாங்கியுள்ளது" என்று லோஹியா கூறினார்.
வருடா வருடம் ஏலத்தில் சாதனை
அஸ்ஸாமில் உள்ள எஸ்டேட் டிசம்பர் 16 அன்று நடைபெற்ற ஏலத்தில் இந்த தேயிலையை ரூ. 1 லட்சத்துக்கு மேல் விற்பனையானது. இது இந்திய தேயிலை ஏலத்தில் பெறப்பட்ட அதிகபட்ச விலையாகும். இதே போல கடந்த ஆண்டு (டிசம்பர் 2021), அன்று கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் (ஜிடிஏசி) மனோஹரி கோல்டு டீ ஒரு கிலோ ரூ. 99,999க்கு விற்கப்பட்டது. அந்த சாதனையை அந்த டீயே இந்த வருடம் முறியடித்துள்ளது. மோனோஹரி டீ அதன் பிரீமியம் தயாரிப்பான கிலோவுக்கு ரூ.75,000 என்ற சாதனை விலையில் மாநிலத்தில் இரண்டு முறை விற்பனையானது. 2020 ஆம் ஆண்டில், டிகோம் டீ எஸ்டேட் அதன் கோல்டன் பட்டர்ஃபிளை டீயை ஒரு கிலோவுக்கு ரூ.75,000க்கு விற்றது.
ஐந்தாவது வருடமாக தொடர்ந்து சாதனை
பின்னர், அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு சியாங்கில் உள்ள டோனி போலோ டீ எஸ்டேட் தயாரித்த சிறப்பு தேயிலை ஏலத்தில் அதே விலைக்கு வந்தது. 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக வரலாற்றை உருவாக்கியதில் நிறுவனம் "மகிழ்ச்சியடைகிறது" என்று லோஹியா கூறினார். "2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக வரலாற்றை உருவாக்குகிறோம். இந்த வகை பிரீமியம் தரமான சிறப்பு தேயிலையை நுகர்வோர்கள் மற்றும் தேயிலை ஆர்வலர்கள் அதிகம் விரும்புகின்றனர். அஸ்ஸாம் தேயிலை தொழில் அதன் இழந்த புகழை மீண்டும் பெற இது உதவுகிறது."
தேயிலையின் சிறப்புகள்
"இந்த தேநீர் பல ஆரோக்கியமான நன்மைகளின் மாறுபட்ட குணாதிசயங்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறது. குடித்து முடித்த பின்னும் அதன் சுவை நாக்கிலேயே நிற்கும்" என்றார். கவுஹாத்தி தேயிலை ஏல மையத்தில் ரூ. 1 லட்சம் வரை மட்டுமே வரம்பு இருப்பதால், ஒரு தனியார் ஏலத்தில் இந்த தேநீர் விற்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார். மனோஹரி கோல்ட் என்பது மென்மையான தளிர்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு அரிய தேநீர் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பறிப்பது முதல் உற்பத்தி வரை, முழு செயல்முறையும் திறமையான கைவினை கலைஞர்களால் செய்யப்படுகிறது, மேலும் இலைகள் வெயிலில் உலர்த்தப்படுகின்றன. அதற்கென தனி சிறப்பான புதரில் மிக குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படுகிறது.