மேலும் அறிய

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது கலை படைப்புகள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

கலைப் படைப்புகள் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதனால் அதை வேறு எந்த அளவுகோல் கொண்டும் பிரித்துப் பார்க்காமல் கலைப் படைப்புகளை ரசிக்க வேண்டும் என்று கூறினார்.

61வது கேரள கலைத் திருவிழாவின் தொடக்க விழாவில் பினராயி விஜயன் இவ்வாறாகப் பேசினார். அவர் பேசியதாவது: இந்தத் திருவிழா கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை பறைசாற்றும் களம். இங்கே சாதிக்கும், மதக்கும் இடமில்லை. கலை சாதி, மதம் கடந்தவை.

திருவிழாக்களை இப்படித்தான் நாம் கொண்டாட வேண்டும். அப்படி இருந்தால் தான் கேரளா என்றும் அமைதி, மகிழ்ச்சி, மதச்சார்பின்மையின் மையமாக இருக்கும். 

இந்த திருவிழாவில் 14 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெறுவது எளிதல்ல. அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் திறமைகளும் பறைசாற்றுவதும் தான் இலக்காக இருக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் பங்கேற்றல் என்பதே மிகப்பெரிய சாதனை தான். இந்த மனோபாவம் மாணவர்கள் மனங்களிலும் இருக்க வேண்டும், பெற்றோரின் எண்ணங்களிலும் இருக்க வேண்டும்.

குழந்தைகளின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை. அதை நோக்கி அரசாங்கம் மிக முக்கியமான நகர்வுகளை எடுத்துவருகிறது. அதில் ஒன்று போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய கலைத் திருவிழாவான இந்தத் திருவிழாவை நாம் நடத்த முடியவில்லை. 

கொரோனா பெருந்தொற்றால் குழந்தைகள் பலரும் மன அழுத்தத்தில் இருந்தனர். இப்போது நடைபெறும் இந்த கலைத் திருவிழா மாணவர்களுக்கு ஆசுவாசம் தரும்.

இருப்பினும் உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவுவதால் இவ்வளவு பெரிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

கலை நிகழ்ச்சியை முன்னிட்டு விழா நடைபெறும் பகுதியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மோப்ப நாய்கள் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

View this post on Instagram
 
A post shared by Entri App മലയാളം (@entri.app)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?

சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!

Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்

இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!

Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது

Embed widget