இனி, நேதாஜி வேஷம் போட முடியாது போலயே.. ராணுவ உடைகளை விற்க தடை.. போலீசிடம் இருந்து வந்த அலர்ட்
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ராணுவ உடைகளை அணிந்திருந்ததாகவும் எனவே, தீவிரவாதிகள் கையில் ராணுவ உடைகள் செல்வதை தடுக்கும் நோக்கில் ராணுவ உடைகளை விற்பதற்கு தற்காலிக தடை விதிப்பதாக போலீஸ் அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ராணுவ உடைகளை விற்க உத்தராகண்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ராணுவ உடைகளை அணிந்திருந்ததாகவும் எனவே, தீவிரவாதிகள் கையில் ராணுவ உடைகள் செல்வதை தடுக்கும் நோக்கில் ராணுவ உடைகளை விற்பதற்கு தற்காலிக தடை விதிப்பதாக உத்தராகண்ட் போலீஸ் அறிவித்துள்ளது.
இனி, நேதாஜி வேஷம் போட முடியாது போல!
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ உடைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ராணுவ உடைகளை அணிந்திருந்ததாகவும் எனவே, தேச விரோதிகளிடம் ராணுவ உடைகள் செல்வதை தடுக்கும் நோக்கில் ராணுவ உடைகளை விற்பதற்கு தற்காலிக தடை விதிப்பதாக உத்தராகண்ட் போலீஸ் அறிவித்துள்ளது.
காவல்துறை அதிரடி உத்தரவு:
இதுகுறித்து டேராடூன் நகர மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் சிங் கூறுகையில், "ராணுவம், துணை ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு வீரர்களின் சீருடைகளை விற்பனை செய்யும் கடைகளை அடையாளம் காணவும், அடையாளம் இல்லாமல் இந்தப் பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்தவும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டேராடூனில் கடை போட்டுள்ள அதுல் ஆனந்த் என்பவர் இதுகுறித்து கூறுகையில், "இந்த உத்தரவுக்கு முன்பே நாங்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறோம். வாங்குபவரின் அடையாளத்தைச் சரிபார்க்காமல் நாங்கள் சீருடைகளை விற்பனை செய்வதில்லை. டேராடூனில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகள் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ராணுவ சீருடைகளை விற்பனை செய்து வருகிறது" என்றார்.
மற்றொரு வியாபாரியான மன்பிரீத் சந்தோக், இதுகுறித்து பேசுகையில், "ராணுவ வீரர்கள், ராணுவ கேன்டீன்களில்தான் சிறப்பு ராணுவ உடைகளை வாங்குகிறார்கள். அதை அவர்கள் வெளியே தைத்து கொள்கிறார்கள்" என்றார்.
கடைக்காரர்களை அடையாளம் கண்டு, முறையான அடையாளச் சரிபார்ப்பு இல்லாமல் ராணுவ சீருடைகளை விற்க வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததை தொடர்ந்து, உத்தராகண்டில் வசிக்கும் மற்றும் படிக்கும் காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதையும் படிக்க: UPSC exam: 57-ல் 50 பேர்! நான் முதல்வன் திட்டத்தால் சாதித்த மாணவர்கள்! பூரித்து போன முதல்வர் ஸ்டாலின்





















