மேலும் அறிய
அம்பானி வீட்டில் பார்ட்டி: கிளம்பிய எதிர்ப்பு: மலைப்பாம்புடன் இருந்த புகைப்படத்தை நீக்கிய நடிகை!
இஷா அம்பானியின் இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் மலைப்பாம்புடன் விளையாடிய பாலிவுட் நடிகை.

மலைபாம்புடன் அனன்யா பாண்டே
இஷா அம்பானியின் இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே மலைப்பாம்புடன் விளையாடியதை பார்த்த நெட்டிசன்ஸ் எதிர்மறை கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் அம்பானி. அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணா மற்றும் ஆதியா என பெயரிடப்பட்ட இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் கடந்த 18ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜியோ வேர்ல்ட் கார்டனில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் நண்பர்கள் என பலர் பங்கேற்றனர்.
இஷா அம்பானியின் இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டது. அதில், பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே மிகப்பெரிய மலை பாம்புடன் இருக்கும் புகைப்படம் நெட்டிசன்ஸை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விழாவில் பங்கேற்ற அனன்யா பாண்டே மலைப்பாம்பை எடுத்து தனது தோல்மீது போட்டு போஸ் கொடுத்திருந்தார். அதேபோல் நாய்க்குட்டியை தனது மடியில் வைத்து கொஞ்சும் புகைப்படமும் வெளியிட்டார்.
இஷா அம்பானி வீட்டு நிகழ்வில் பங்கேற்று மலைபாம்புடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பங்கேற்ற அனன்யா பாண்டே, தனக்கு மிகவும் பிடித்த இரு விலங்குகள் பப்பிஸ் மற்றும் பாம்புகள் என குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
அதை பார்த்த நெட்டிசன்ஸ் அனன்யா விலங்கு வதை செய்வதாக குறிப்பிட்டு கருத்து பதிவிட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகேஷ் ஷெட்டி மும்பை போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அன்னயா பாண்டே உட்பட சில பிரபலங்கள் மலைப்பாம்புகளை விலங்குவதை செய்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு குறிப்பிட்டிருந்தார். சமூக வலைதளத்தில் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து ராட்சத மலை பாம்புடன் இருக்கும் புகைப்படத்தை அனன்யா பாண்டே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
மேலும் படிக்க: Pneumonia: சீனாவை அச்சுறுத்தும் நிமோனியா! அனைத்து மாநிலங்களுக்கும் அவசர கடிதம்...மத்திய அரசு அதிரடி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement