மேலும் அறிய

SBI கிரெடிட் கார்டு வைத்திருப்போர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிவிப்பு!

அனைத்து வகையான எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கும் புதிய கட்டணங்கள் பொருந்தும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சில பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கும் புதிய கட்டணங்கள் பொருந்தும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதன்படி, போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் மாற்றப்பட்டு, இனி கூடுதலாக 1% கட்டணம் பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. போக்குவரத்து பரிவர்த்தனையின் மதிப்பு 30,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் 1% கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.


SBI கிரெடிட் கார்டு வைத்திருப்போர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிவிப்பு!

இது கிரெடிட் கார்டின் ஒரு மாத மொத்த பயன்பாட்டின் அடிப்படையில் அல்லாமல், ஒவ்வொரு தனிப்பட்ட பரிவர்த்தனைக்கும் தனித்தனியாக கணக்கிடப்படும். உதாரணமாக, நீங்கள் ஒரு ஒற்றை பரிவர்த்தனையில் 35,000 ரூபாய் செலுத்தினால், அதற்கு 1% கட்டணமாக 350 ரூபாய் கட்டணமாக வங்கிக்கு செலுத்த வேண்டும்.

அடுத்ததாக எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கான கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பொறுத்தவரை, ஒரு பில்லிங் சைக்கிளில் (Billing Cycle) அதாவது இரண்டு ஸ்டேட்மென்ட் தேதிகளுக்கு இடைப்பட்ட 28 முதல் 31 நாட்கள் செய்யப்படும் மொத்த எரிபொருள் செலவு 50,000 ரூபாயை தாண்டினால் மட்டுமே 1% கட்டணம் விதிக்கப்படும்.


SBI கிரெடிட் கார்டு வைத்திருப்போர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிவிப்பு!

ஒரு மாதத்தில் நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் போட்டு அதற்காக 50,000 ரூபாய்க்கு கீழே இருந்தால் எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லை. ஒருவேளை செலவு 50,000 ரூபாய் என்ற வரம்பை தாண்டிவிட்டால், முழு எரிபொருள் செலவுக்கும் 1% கட்டணம் பொருந்தும். பெட்ரோல் பங்குகள், எரிபொருள் டீலர்கள் மற்றும் அது தொடர்பான விற்பனை நிலையங்களை குறிக்கும் MCC 5172, 5541, 5542 மற்றும் 5983 ஆகிய குறியீடுகளின் கீழ் நடக்கும் பரிவர்த்தனைகள் இதில் அடங்கும் என தெரிவித்துள்ளது.

சாதாரண குடும்பங்களின் மாதாந்திர எரிபொருள் செலவு பெரும்பாலும் 50,000 ரூபாய்க்குள் தான் இருக்கும் என்பதால், பெரும்பாலான சாதாரண பயனர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். போக்குவரத்து செலவுகளைப் பொறுத்தவரை, பெரிய தொகையாக இருந்தால் அவற்றை பிரித்து செலுத்துவது நல்லது. இந்த கட்டண மாற்றங்கள் குறித்த சந்தேகங்களுக்கு எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர் சேவை எண் 1860 180 1290-ஐ தொடர்பு கொள்ளலாம். எனவே நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் உங்களின் கிரெடிட் கார்டு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!
கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!
இனி PF பணம் எடுக்க அலைய வேண்டாம்! UPI, ATM மூலம் பணம் எடுக்கும் வசதி – எப்போது அமல்?
இனி PF பணம் எடுக்க அலைய வேண்டாம்! UPI, ATM மூலம் பணம் எடுக்கும் வசதி – எப்போது அமல்?
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களே கவனம்! 12 கி.மீ பாரம்பரிய காட்டு வழி திறப்பு – முக்கிய அறிவிப்பு!
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களே கவனம்! 12 கி.மீ பாரம்பரிய காட்டு வழி திறப்பு – முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Embed widget